செய்திகள்

மகளைக் கொன்று வெட்டிய தலையோடு போலீசில் சரண் அடைந்த தந்தை

ஆத்திரம் கண்ணை மறைத்தது

மகளைக் கொன்று வெட்டிய தலையோடு போலீசில் சரண் அடைந்த தந்தை

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ, மார்ச் 4–

மகளின் தலையை அறுத்துக் கொன்ற தந்தை, மகளின் தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். நெஞ்சை உலுக்கும் இந்தக் கொடூர சம்பவம் ஹர்டோய் மாவட்டத்தில் நடந்துள்ளது.

ஹர்டோய் மாவட்டம் பண்டேதரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ். 17 வயது மகள், தூரத்து உறவினரான ஆதேஷுடன் நெருங்கியப் பழகுவதைப் பார்த்து ஆத்திரமடைந்து இருவரையும் கொல்ல முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் மகள் தனியாக இருந்தபோது, இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தந்தை, கூரான ஆயுதத்தால் மகளின் தலையை அறுத்து தனியாக எடுத்தார். தலையோடு காவல்நிலையத்துக்குச் சென்றார். வெறித்தனமாக சாலையில் தலையுடன் நடந்து சென்று கொண்டிருந்த சர்வஷை தடுத்து நிறுத்திய காவலர்கள், அது யாருடைய தலை என்று கேட்டுள்ளனர். அதற்கு, எந்த பதற்றமும் இல்லாமல், ‘‘ஐயா, நான் எனது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டேன், என்னை கைது செய்யுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

உடனடியாக அவரைக் கைது செய்து, தலையையும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *