வர்த்தகம்

‘மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம்: ஜெம் மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் திறந்தார்

சென்னை, மார்ச் 9–

தெலுங்கானா புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை ஜெம் மருத்துவமனையில் நடந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து பங்களித்து வரும் ஜெம் மருத்துவமனைக்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலுவை பாராட்டினார்.

டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், “கர்ப்ப வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக ௨ள்ள புற்றுநோய் வகைகளாகும். ஆரம்பகால கர்ப்பவாய்ப் புற்றுநோயை எளிய சோதனையால் சுலபமாக கண்டறியலாம். இதன் அறிகுறிகள் தெளிவற்றவை மற்றும் பொதுவான மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகவும் மேம்பட்ட கட்டத்தில் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றன.

லேப்ரோஸ்கோபி மற்றும் ரொபோட்டிக் அறுவை சிகிச்சை, உள்ளிட்ட முறைகளால் புற்று நோயை குணப்படுத்துவது சாத்தியமாகி உள்ளது. லேப்ரோஸ்கோபி முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை, காயம் குறைவாகவும், வலி குறைவாகவும், விரைவில் குணமாகவும் வழி வகுக்கிறது ” என்றார்.

தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் பேசுகையில், “ஜெம் மருத்துவமனையில் பெண்கள் சம்பந்தமான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள எங்கள் மையம் போன்ற சிறுநீரகவியல் குறித்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்” என்றார்.

லேப்ரோஸ்கோபிக் மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் கார்த்திகா கூறுகையில், குறைந்த செலவிலான புற்றுநோய் சிகிச்சை மையம் பெண்களின் புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களான யுட்ரஸ், செர்விக்கல் மற்றும் ஓவரியன் புற்றுநோய்களைப் பூர்த்தி செய்யும் ஒரு பிரத்யேகத் துறையைக் கொண்டுள்ளது. கர்ப்பவாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியை எங்கள் மருத்துவமனையில் வழங்குகிறோம் என்றார்”.

இது பற்றி அறிய www.geminstitute.in வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *