சென்னை, மார்ச் 8–
இன்று சர்வதேச மகளிர் தினம் மற்றும் ஹோலி பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது:–
“சர்வதேச மகளிர் நாளில், நமது நாரி சக்தியின் சாதனைகளுக்கு அஞ்சலி. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் மேம்பாடு, அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
ஹோலி வாழ்த்து
வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி. பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் அனைவரது வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.