செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமியார்–மருமகள் இடையே உணவு ஊட்டிவிடும் போட்டி

ஈரோடு, மார்ச் 9–

உலக மகளிர் தினத்தை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மகளிர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் நிர்வாகத்தினர் வித்தியாசமான முறையில் மகளிர் தினத்தைக் சிறப்பிக்கும் விதமாக போட்டியுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டனர்.

மாமியார் மருமகளுக்கான போட்டி என்றும், போட்டியில் பங்கு பெறும் மாமியார் -மருமகள் உண்ணும் உணவுகளுக்கு பணம் வாங்கப்படாது என்றும், ஆனால் அதற்கு ஒரே நிபந்தனை மாமியார் -மருமகள் இருவரும் மாறி மாறி தங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை மிச்சமின்றி ஊட்டிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

இதனையடுத்து பல மாமியார் மருமகள்கள் ஜோடியாக வந்து ஓட்டல் உணவு சாப்பிட்டு விட்டு வெற்றியுடன் சென்றனர்.

மாமியார் மருமகள்கள் பஞ்சாயத்தை பார்த்த கண்களுக்கு இந்த ஒற்றுமை உணவூட்டல் பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறும் போது, இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாமியார் -மருமகள் ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் வெற்றி பெற்று இருப்பதாகவும், கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கியதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *