செய்திகள்

மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஷபாலி வர்மா தொடர்ந்து முதலிடம்

துபாய், செப். 8–

மகளிர் கிரிக்கெட்டில் டி20 தரவரிசையில் பேட்ஸ்வுமன்கள் பிரிவில் இந்தியாவின் ஷபாலி வர்மா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஐ.சி.சி. இருபது ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான செபாலி வர்மா 759 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 744 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 716 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், நியூஸிலாந்தின் சோபி டிவைன் ஓரிடம் முன்னேறி 689 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கும், தென் ஆப்பிரிக்காவின் லிஸேலே லீ 3 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள்:

இங்கிலாந்தின் நடாலி ஸ்கீவர், நியூஸிலாந்தின் சோபி டிவைன் ஆகியோர் தலா 371 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனலடஇ ஸ்காட்லாந்தின் கேத்தரின் பிரைஸ் 327 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா ஓரிடம் முன்னேறி 321 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பொ்ரி, மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலே மேத்யூஸ் ஆகியோரும் தலா ஓரிடம் ஏற்றம் கண்டு முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களையும் மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் 3 இடங்கள் சறுக்கி 7-ஆவது இடத்தையும்,

பௌலர்கள்:

இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் (778) முதலிடத்தையும், ஆஸ்திரேலியாவின் மீகன் ஷட் 2 இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் சாரா கிளென் (739) மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்தியாவின் தீப்தி சர்மா 703 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *