செய்திகள்

மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்: உதயநிதி உறுதி

Makkal Kural Official

திருச்சி, ஏப். 4–

சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருச்சி மணப்பாறை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உதயநிதி பேசியதாவது:–

தி.மு.க. கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பிரதமர் மோடிக்கும் வைக்கும் வேட்டு. குறைந்தது 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

தமிழகத்தின் காலை உணவுத்திட்டம் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி பெற மாதம் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும்.

சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.

பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தில் சுமார் 7 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.

மணப்பாறையில் கூடுதல் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். பொன்னியாறு அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

One Reply to “மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்: உதயநிதி உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *