சிறுகதை

மகனாற்றுப்படை – ராஜா செல்லமுத்து

ஜோயல் இருசக்கர வாகனத்தில் எப்போது சென்றாலும் வாகனத்தின் 6 வயது மகனை முன்னால் அமர வைத்து தான் செல்வார்.

பின்னால் இருக்கும் இருக்கைக்கு அவர் செல்லும் பாதையில் பெரியவர்கள் யாரேனும் தெருவில் சென்றால் அவர்களை அழைத்து உட்கார வைத்து அவர்கள் இங்கு செல்கிறார்களோ ? அங்கு இறக்கி விட்டு செல்லும் குணம் படைத்தவராக இருந்தார்.

இது மகன் விஷாலுக்கு புரியாமல் இருந்தது. எப்போது சென்றாலும் வயதானவர்களைப் பின் இருக்கையில் அமரவைத்து அழைத்துச் செல்லும் தந்தையின் செயல் போகப்போக விஷாலுக்கு ஒட்டிக்கொண்டது

பள்ளி, மார்க்கெட் என்று எங்கு சென்றாலும் மகன் விஷால் வண்டியின் முன்னால் அமர்ந்திருப்பான் . போகும் வழியில் எப்போதும் ஒருவரை அழைத்து செல்வது வழக்கமாக இருந்தது.

தகப்பனின் அந்த நல்ல செயல் அந்த பிஞ்சு மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது.

அவன் எப்போது வண்டியில் ஏறினாலும் அப்பா யாராவது ஒருவரை பின் இருக்கையில் அமர வைத்து விடுவார் என்று விஷாலுக்கு தோன்றியது.

ஆனால் அவர் இளைஞர்களையும் நடுத்தர வயது உள்ளவர்களையும் அவர் வண்டியில் ஏற்றுவதில்லை

இந்தப் பாகுபாடு விஷாலுக்கு தெரியாது . அந்த வயது வித்தியாசமும் விஷாலுக்கு புரியாது . ஏதோ ஒரு மனிதரை அப்பா தன் பின்னிருக்கையில் அமர வைத்துக் கொள்வார் என்பது மட்டும் அவனுக்கு தெரியும்.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் ஒருநாள் அவர் வழியில் யாரும் தென்படாததால் யாரையும் தன் பின்னிருக்கையில் ஏற்றாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று விசால் அப்பாவிடம் கேட்டான்:

அப்பா ஏன் இன்னிக்கி ஒருத்தரையும் ஏத்துல ? என்று

யாரும் இல்லையே ; பெரியவங்க யாரும் இல்லையே.? அதுதான் ஏத்தல என்று சொன்னார் அப்பா.

அப்போது ஒரு இளைஞன் அந்த ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அவனை கை நீட்டி அழைத்து சார் எங்க போறீங்க வண்டில ஏறுங்க. நீங்க போற இடத்துல அப்பா இறக்கி விடுவார் என்று சொல்ல

ஜோயலக்கு என்னவோ போல் ஆனது.

இல்ல தம்பி இளைஞர்கள் நடுத்தர வயதுக்காரர் அவங்க எல்லாம் நான் ஏத்துறதில்ல. அவங்க நடந்து போகட்டும். நான் வயதானவர்களை மட்டும் தான் ஏத்துவேன் என்று சொன்னார் ஜோயல்

அப்படின்ன என்னப்பா? இவங்களும் மனுஷன் இல்லையா ?இவங்களையும் ஏற்றிக் கொண்டு விடுங்கள் என்று விஷால் சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு தர்மசங்கடமாகப் போனது.

சார் என்ன சார் நீங்க, போங்க தம்பி ஏதோ தெரியாம சொல்லிட்டேன் என்று அந்த இளைஞர் சொன்னார்.

இல்ல பரவால்ல ஏறுங்க என்று அந்த இளைஞனை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜோயல்.

அந்த இளைஞன் பிடிவாதமாக ஜோடியின் வண்டியில் ஏற மறுத்து விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விஷால் அப்பாவிடம் கேட்டான்.

ஏன்பா அந்த அங்கிள் வண்டியில ஏறல ?என்று கேட்டதும் இளைஞர்கள், நடுத்தர வயதுக்காரர்களுக்கு எல்லாம் உடம்புல தெம்பு இருக்கும் வயசானவங்களுக்கு தான் தெம்பு இருக்காது. அதுதான் அவங்களை நான் வண்டியில் ஏத்துறதில்ல.அவங்க வந்த நடந்து வந்துருவாங்க தம்பி என்று ஜோயல் தன் மகன் விஷாலுக்கு அறிவுறுத்தினார்

யாரா இருந்தாலும் மனுஷங்கதான் அப்பா . எனக்கு அப்படித்தான் தெரியுது. இனிமே நீங்க வண்டியில ஏத்துனா எல்லாத்தையும் ஏத்துங்க அதான் நல்லது ‘வயசானவங்க . சின்னவங்க, பெரியவங்க அப்படி என்று பார்க்காதீங்க. அதுதான் சிறந்த சேவையாக இருக்க முடியும் என்று தன் வயதுக்கு மீறிய பேச்சை விஷால் தன் அப்பாவிடம் சொன்னான்.

அதிலிருந்து ஜோயல் தான் செல்லும் பாதையில் எந்த நபராக இருந்தாலும் ஏற்றிக்கொண்டு போகும் பழக்கத்தை செய்துகொண்டார் .

இப்போதெல்லாம் ஜோயல் கேட்பதைவிட, மகன் விஷாலே நடந்து சென்று கொண்டிருக்கும் எந்த மனிதனாக இருந்தாலும் தன் அப்பாவிடம் ஏற்றிக் கொண்டு போகச் சொல்வான்.

இப்போதுகூட ஜோயலின் முன் இருக்கையில் விஷால் ஃபின்னிருக்கையில் ஒரு இளைஞன் என்று அந்தக் இரு சக்கர வாகனம் படுஜோராக நகர்ந்து ஓடிக் கொண்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *