செய்திகள்

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 17ம் தேதி வரை இன்கம்மிங் சேவை: வோடபோன் அறிவிப்பு

Spread the love

மதுரை,ஏப்.02–

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரும் 17ம் தேதி வரை வரம்பற்ற இன்கம்மிங் சேவைகளை வோடபோன் நிறுவனம் வழங்குகிறது.

கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத பல நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது குறைந்த வருமானம் ஈட்டும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு வோடபோன் நிறுவனம் தனது 10 கோடிக்கும் மேற்பட்ட ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. வரும் 17-ந்தேதி அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற இன்கம்மிங் சேவைகளையும் 10 ரூபாய்க்கான டாக்டைம் கிரெடிட் வசதியையும் வழங்குகிறது.

இது குறித்து வோடபோன் மார்க்கெட்டிங் இயக்குனர் அவ்னீஷ் கோஸ்லா கூறுகையில்:-–

இந்த சிக்கலான காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையாற்றும் நோக்கில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்டு திட்டம் முடிவடைந்த நிலையில் அந்த சேவை 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா கால நீட்டிப்பு திட்டமானது கோடிக்கணக்கான வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். இந்த நீட்டிப்பின் மூலம் அவர்கள் இலவச இன்கம்மிங் சேவையை பெற முடியும். முன்பே ப்ரீபெய்டு திட்டம் காலாவதியான வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும். மேலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் கிரெடிட் டாக் டைம் வசதியையும் வோடபோன் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது அவர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பலாம். இந்த கால நீட்டிப்பு மற்றும் டாக் டைம் ஆகியவை வரும் நாட்களில் தகுதியான அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களுக்கான இந்த சிறப்பு முயற்சியால் அவர்கள் தங்கள் அன்பானவர்களுடன் வோடபோன் மூலம் இணைந்திருக்கலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள எங்களின் வோடபோன் ஸ்டோர்களில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *