செய்திகள்

போலி ஜிஎஸ்டி ரசீது மூலம் ரூ.35 லட்சம் கையாடல்: ஓசூரில் பெண் ஊழியர் கைது

ஓசூர், ஏப். 14–

போலி ரசீது மூலம் ஜி.எஸ்.டி வரி கணக்கு காட்டி ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் மென்பொருள் நிறுவன பெண் பணியாளர், கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், சாந்தி நகரைச் சேர்ந்த ஷைனி இவாஞ்சலின் (வயது 24) என்பவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். ஜி.எஸ்.டி வரி 70 லட்சம் ரூபாய் செலுத்தும் பணியை ஷைனி இவாஞ்சலினிடம், மேலாளர் ஒப்படைத்தார்.

பெண் கைது

ஆனால் அவர், 70 லட்சத்தில் 35 லட்சம் ரூபாய் மட்டும் ஜி.எஸ்.டி வரி கட்டிவிட்டு, ரூ.35 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். அதற்கு பதில் போலியான ரசீதுகள் வைத்து ஜி.எஸ்.டி.யில் கணக்கு காட்டியுள்ளார். இந்த நிலையில் அலுவகத்தின் உயரதிகாரிகள் அலுவலக கணக்குகளை சரிபார்த்தபோது, போலியான ரசீதுகளை வைத்து பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தனியார் மென்பொருள் நிறுவன மேலாளர் செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். புகாரை அடுத்து, குற்றப்பிரிவு போலீஸார் ஓசூரில் இருந்த இவாஞ்சலினை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.