செய்திகள்

போலி இ–பாஸ் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் நடைபயிற்சிக்கு அனுமதியில்லை

போலி இ–பாஸ் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை:

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

 

சென்னை, ஜூன் 26–

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை. போலி இ–பாஸ் தயாரிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கே.பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பாக சைதாப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதனை ஆய்வு செய்தபின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தினந்தோறும் முகக்கவமும், வாரந்தோறும் கையுறைகளும் வழங்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இ–-பாஸ், முறையாக பெறுவது அவசியம். கைகளால் எழுதி தரும் இ-–பாஸ், தனியாரிடம் பெறும் இ–-பாஸ் போன்றவை செல்லாது. கியூஆர் கோடு இன்றி போலி இ–-பாஸ் தயாரிப்பவர்கள் குறித்து புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *