செய்திகள் நாடும் நடப்பும்

போர் விமான தயாரிப்பில் இந்தியாவின் சாதனை வளர்ச்சி!


ஆர். முத்துக்குமார்


தொழில்நுட்பங்களை நாம் கையாளும் திறனைக் கண்டு உலகமே வியப்புடன் பார்த்துப் பாராட்டி வருவதை அறிவோம். எலெக்ட்ரானிக் வாக்களிப்பு முதல், அதிவேக தொலைத்தொடர்புச் சாதனங்கள் வரை நமது திறமையைப் பார்க்கும் பல நாடுகள் நமது ஞானத்தை பெற முன் வருகிறார்கள்.

தேர்தலில் வாக்குப் பதிவு முதல் தவறில்லா வாக்கு எண்ணிக்கை வரை சிறப்பாகவே நடத்தி வருவதால் பல நாடுகள் நம்மிடம் ஆலோசனை பெறுவது முதல் அக்கருவிகளை வாடகைக்கும் எடுத்துக் கொள்வது பெருமைக்குரிய ஒன்றாகும்.

போர் விமானத் தயாரிப்பு

நமது விண்வெளிச் சாதனைகள் வரலாற்றுச் சிறப்பானவை ஆகும். இஸ்ரோ அமைப்பின் உதவியைக் கோரி பல நாடுகள் தங்கள் செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாகவே நிலைநிறுத்தி வருகிறார்கள்.

அடுத்து பெரும் சாதனையானது தேஜஸ் 2 போர் விமான தயாரிப்புக்கும் மத்திய அரசு ஒப்புதல் தந்திருப்பது நமது தொழில்நுட்ப வல்லமை புதிய ஊக்கத்துடன் செயல்பட ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேஜஸ் 2.0 திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்து விட்டது.

மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோ நாடிக்ஸ் நிறுவனம், தேஜஸ் எம்.கே. 1 ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. மொத்தம் 123 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க, விமானப்படை ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதில் 30 விமானங்கள், விமானப்படையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

அடுத்து இதுவரை தேஜஸ் 2.0 திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் தேஜஸ் மார்க் 2 மாதிரி விமானம் தயாராகிவிடும் என்றும் 2030 ல் உற்பத்தி தொடங்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வலிமை அதிகரிக்கும்

தற்போது விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள தேஜஸ் மார்க் 1 ரக விமானம் 3 டன் எடை கொண்டதாகும். தேஜஸ் மார்க் 2 விமானம் 4 டன் எடை கொண்டதாக இருக்கும். இதில் அதிநவீன ஆயுதங்கள், ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன. அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. தற்போது 30 தேஜஸ் ரக விமானங்கள் படையில் உள்ளன. தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும்போது படையின் வலிமை மேலும் அதிகரிக்கும்.

இன்று நாம் உலக அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் எல்லாவற்றையும் எதிர்த்து வருகிறோம். எஸ்சிஓ, பிரிக்ஸ் அமைப்பு கூட்டங்களில் நமது பங்களிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ‘குவாட்’ அமைப்பில் சேர்ந்து அமெரிக்காவிடமும் நெருக்கம் காட்டினாலும் குவாட்டை அடுத்த ‘நேட்டோ’ கூட்டமைப்பாக மாறாமல் பார்த்து வருகிறது.

நமது போர் விமானங்கள், பீரங்கி தொழிற்சாலைகள், ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்பேட்டைகள், முன்னணி வல்லரசு நாடுகளுக்கு பெரிய தொழிற்சாலைகளும் உலக உற்பத்தியை மிக அதிகமாகவே செய்யும் திறன் பெற்று இருக்கிறது. போர் என்று வந்து விட்டால் நம்மை அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட்டாகப் படையெடுத்து வந்தாலும் நம்மை இந்திய மண்ணில் தோற்கடிக்க முடியாது. அதிவேகத்தில் அவர்களைத் தோற்கடித்து வெளியேற்றி விட முடியும்.


Leave a Reply

Your email address will not be published.