சிறுகதை

போராட்டங்கள்- ஆர். வசந்தா

Makkal Kural Official

அன்று அந்த பத்திரிக்கை அலுவலகம் உற்சாகத்தில் அமளி ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் வாங்கிய புதிய மிஷினை துவங்கி வைக்க முதல்வர் வருகிறார்.

பத்திரிக்கை உலகம் என்றாலே போராட்டங்கள் நிறைந்தது தான். எல்லாவற்றையும் கடந்த பீடுநடையிட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பெண் புதிதாக ஒரு குழந்தையை பிரசவிப்பதற்கு இணையானது தினசரி பத்திரிக்கை நடத்துவது. அந்தச்‘செய்தி திரட்டு’ என்ற அந்த பத்திரிக்கை ஆசிரியர் ஆனந்தன் அடக்கமாகவே இருந்தார். அவர் தான் எல்லா முயற்சிகளுக்கும் காரணமாக இருந்தார்.

முதல்வர் கொஞ்சம் உற்சாகமற்றே வந்தார். முதலில் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார். தொழிலாளர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள்.

பிறகு பத்திரிக்கை அலுவலகத்தை சுற்றிக் காட்டினார்கள். பிரமித்து விட்டார் அந்த முதல்வர். செய்தி திரட்டு இதழை நாம் சாதாரணமாக நினைத்து விட்டோம். இந்தச் செய்தி தாள் தமிழ்நாட்டின் முதன்மை பத்திரிக்கையாகும். தொழிலாளர்கள் மட்டுமே நடத்துகிறார்களா என அதிசயம்! ஆசிரியரைப் பாராட்ட எண்ணிய முதல்வர் அவரின் பணிவும் அடக்கமும் முதல்வருக்கு பிரமிப்பை தந்தது.

புதிய மிஷினுக்கு வரும் போதே அவர் வாங்கிய பாராட்டுகளைப் பார்த்து மிரண்டு விட்டார். ஆனந்தன் சார் வாங்கிய ஜனாதிபதி பரிசுகள், நரசிம்மராவுடன் யு.எஸ்.எ போன வற்றையும் பார்த்து அதிசயித்தார். ரஷ்ய கவர்ன்மெண்ட் தங்கள் நாட்டின் 25ம் ஆண்டு சுதந்திர தின ஆண்டை கவுரப்படுத்த ஆனந்தன் சாரை அழைத்தது முதல்வருக்கு ஆச்சர்யமாக தோன்றியது.

ஆபீசில் மாட்டிய புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். சுவிஸ் நாட்டில் நடந்த பத்திரிக்கை உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதையும் கண்டு வியந்தார். மேலும் மிகவும் ஆச்சரியப்படுத்தியது அண்ணா கூறிய ‘‘ஆனந்தன் ஒரு மாற்றான் வீட்டு மல்லிகை. மல்லிகையை நழுவ விடக் கூடாது என்று அவரின் பத்திரிக்கையில் எழுதியது தான்.

அந்த மகிழ்ச்சி அந்த முதல்வரின் முகத்தில் தாண்டவமாடியது. இத்தனை லட்சங்களில் வாங்கப் பட்டதா? தொழிலாளர்களும் ஒவ்வொரு மிஷின்களைப் பற்றி விளக்கினார். இங்கு மட்டுமல்ல, மதுரை, கோயம்புத்தூரிலும், திருநெல்வேலியும் எங்கள் கிளைகள் உள்ளன என்றார்கள் தொழிலாளர்கள். அத்துடன் வந்த இணை ஆசிரியரும் கூட வந்ததுடன் இந்த கட்டிடங்கள் அனைத்தையும் ஆனந்தன், நான் என இருவமே முக்கிய மூளையாக இருந்து செயல்புரிந்தோம் என்றார்.

இவ்வளவு தூரம் முன்னேற உங்களைத் தூண்டியது யார்? என்றதுடன் நீங்கள் ஏதாவது ஒரு முதலாளியுடன் இணைந்துள்ளீர்களா? இல்லை ஒரு கட்சி பிரமுகரின் பினாமியா என்று கேட்டார். எதுவும் இல்லை நாங்களே தான் முதலாளிகள் தொழிலாளிகள் என்றும் கூறினார். நம் ஆனந்தன் சார் ஒரு புன்முறுவல் மட்டுமே புரிந்தார்.

பல பத்திரிக்கைகளில் பணிபுரிந்து ஒவ்வொருவரும் தினசரி விற்பனை லட்சத்தை தாண்யடிது தான் இவரின் சாதனை என்று இணை ஆசிரியர் கூறினார். ஆனந்தன் அப்போது தான் சொன்னார், கர்ம வீரர் காமராஜர் என்னை தனியாக இருந்து ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கும் யோசனையைக் கூறினார். அத்துடன் ஒரு பழைய மிஷினையும் மலிவான விலையில் வாங்கித் தந்தார்.

இடத்தையும் ஒரு புரவலர் மலிவு விலையில் கொடுத்தார். இந்தப் பத்திரிக்கை உலகத்தை கண்ணும் கருத்துமாக இரவு பகலும் உழைத்து முன்னேறியவர் நம் ஆனந்தன் சார் தான் என்று தொழிலாளர்கள் உரத்த குரலில் கோஷமிட்டனர். மிஷினை திறந்து வைத்து விட்டு ஆசிரியர் ஆனந்தனிடம் பேச ஆசைப்பட்டார் முதல்வர்.

இவ்வளவு சாதனை புரிந்த தங்கள் குடும்பத்திற்காக எதுவுமே என்னிடம் கேட்டதில்லையே என்றார். அருகில் இருந்த இணையாசிரியர் சொன்னார் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. மேலும் அவர் புத்தர் மாதிரி என்றும் கூறினார். புன்முறுவல் மட்டும் ஆனந்தனிடமிருந்து வந்தது.

ஏதாவது சுவையான செய்திகள் எதுவும் இருந்தால் கூறுங்கள் என்றார் முதல்வர்.

‘‘என்ன சொல்வது நினைத்தாலே சிரிப்பு வருவது என்றால் ஒரு தடவை பிரிண்ட் செய்யும்போது, எம்பெருமான் என்று பிரிண்ட் செய்யும்போது மெய்யெழுத்தில் உள்ள புள்ளி நீங்கி விட்டது. அதன் அர்த்தம். எமபெருமாள் என்று ஆகிவிட்டது.

ஒரு தடவை காந்தி பிறந்தாளில் மலர் வெளியிட்டோம். படத்தில் மகாத்மாவாக ரகுபதியாக நடித்த படம் வந்தது.

மறுநாளே தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ஒரு ஆபத்தான செய்தி என்றால் ராஜிவ்காந்தி சுடப்பட்டபோது எங்கள் நிருபர் மிகமிக அருகில் இருந்தார்.

ஆனந்தன் சார் இவ்வளவு வெற்றிக்கும் காரணம் எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதற்கு காரணங்கள் 2 தான் முதலில் ஒரு மிஷினோ இடமோ வாங்கினார். இதனால் எத்தனை தொழிலாளர்கள் குடும்பங்கள் மேன்மை அடையும். வேலைவாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று யோசிப்பேன்.

2 வதாக எத்தனை விலையுயர்ந்த மிஷினாக இருந்தாலும் நம் தொழிலாளர்களே அதை இணைக்கவும் ஓடச்செய்ய வேண்டும். வெளி நிபுணர்களை அழைக்கக் கூடாது. இது தான் என் அன்புக் கட்டளை. ஒரு தடவை வெளியூரில் மெஷின்கள் எல்லாம் பொருத்தப்பட்டன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் செய்திகள் வந்தன. ஒரு கம்ப்யூட்டர் இளைஞர். அவரே அவர் திறமையால் மோடம் வழியாக அன்றைய செய்திகள் வரும்படி செய்து விட்டார். இது எந்த பெரிய முதலாளிகள் பத்திரிக்கைகளில் இந்த உத்தியை கடைபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் செய்தித் திரட்டு மட்டுமே இதைச் செய்தது.

இப்போது இது நடைமுறையில் சகஜமானாலும் 3 வதாக என் பேனா எந்த பண முதலாளிக்கோ, அரசியல் பிரமுகர்களுக்கோ என்றுமே வளைந்ததில்லை என்றார்.

ஆனந்தன் கேட்டுக் கொண்டார். நாம் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவோமே என்றார். அதற்கு முதல்வர் சொன்னார் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள நான் அல்லவோ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி பிரியா விடை பெற்றுக் கொண்டார்.

போராட்டங்கள் தொடரும்..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *