தலையங்கம்
கண்ணியம், அறநெறித் தெளிவுக்காக அயராது உழைத்த ஆன்மீகத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு உலகையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
அவரது போதனைகள், அவரது தைரியமான சொற்கள் மற்றும் அவரது கருணை நிறைந்த செயல்கள் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.
போப் பிரான்சிஸ், உலக அமைதியை நிலை குலைய செய்து வந்த வன்முறைகளுக்கும், பசி, வறுமை, மாற்றுத்திறனாளிகளின் நலன், அகதிகளை அரைவைப்பது போன்ற சமூகத்தின் பல்வேறு சங்கதிகளுக்காக அக்கறையுடன் குரல் தந்தவர் ஆவார்.
இறுதி மூச்சுவரை, அவர் மனித கண்ணியத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் துணிவுடன் குரல் கொடுத்தவர் நீதிக்கான தைரியமாக லுங்கி ஒலித்த குரலுமாகும்.
லத்தீன் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் மற்றும் ஜெசூட் சபையைச் சேர்ந்த முதல் போப், பிரான்சிஸ் உலக சமூகத்தின் மனசாட்சியுடன் நேரடியாகப் பேச பல மரபுகளை உடைத்தார்.
புனித ஆனந்தபூரண பாதிரியாரான ஜார்ஜ் மரியோ பெர்கொலியோ, போப் பிரான்சிஸ் என அழைக்கப்பட்டு, மார்ச் 13, 2013 அன்று கத்தோலிக்க திருச்சபையின் உச்ச தலைமையாக இருக்கும் போப் பதவியில் அமர்ந்தார்.
உலகத் தலைவர்கள் போப் பிரான்சிஸ்சின் அமைதி மற்றும் மனித கண்ணியத்திற்கான அர்ப்பணிப்புப்பணிகளை பாராட்டி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
உக்ரைனில் நேட்டோவின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் துணிந்த ஒருவரை உலகம் இழந்துள்ளது என பல தலைவர்கள் சுட்டிக்காட்டி போற்றுகிறார்கள் . ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் நேட்டோவின் விரிவாக்கம் உக்ரைன் நெருக்கடிக்கு பங்களிக்கும் காரணியாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டியபோது, பழி மற்றும் வன்முறையின் சுழற்சிகளை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, மூல காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, பிரான்சிஸ் ஆழமான பிரதிபலிப்பைத் தூண்டினார்.
காசா மோதலின் போது, போப் பிரான்சிஸ் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வலியுறுத்திய சில உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தலைவர்கள் தங்கள் மக்களின் நலனுக்காக “வெள்ளை கொடியை உயர்த்த வேண்டும்” என்று கேட்டு, போரில் அல்ல, அமைதியில் தைரியத்தைக் காட்ட அனைத்து தரப்பினரையும் அவர் அழைத்தார், மேற்கத்திய தலைநகரங்களில் விமர்சனங்கள் குவிந்தாலும் அதற்க்காக தன் அறைகூவல்களை நிறுத்தவில்லை.
இத்தாலி, பிரான்ஸ், கிரேக்கம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், அவருடைய மனித நேய உழைப்பையும், ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்ததையும் பாராட்டி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஈராக் தலைவர் அப்துல் லதீப் ரஷித், போருக்கு எதிராக அவர் எடுத்த மனிதநேயம் சார்ந்த நிலைப்பாடுகளைப் புகழ்ந்தார்.
உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் மற்றும் குடிமக்கள் அவரை புனித கத்தோலிக்க தேவாலயத்தின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாமல், குரலற்றவர்களின் அச்சமற்ற மற்றும் இரக்கமுள்ள குரலாகவும் என்றும் நம் நெஞ்சில் இடம் பெறுவார்.
“அமைதி என்றும் சாத்தியம் — நாம் அதைத் தேடத் துணிந்தால்’ என்பதே அவரது வரது கடைசி வார்த்தைகள். அவர் உண்மையில் அமைதியின் புனித பரிணாமம் .