சென்னை, பிப் 6–
போத்தீஸ் சுவர்ண மகாலில் ‘தாலி செயின் மேளா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில், ஒவ்வொரு கல்யாண பெண்ணின் பரிணாம வளர்ச்சியிலும், அவளோடு இணைந்தே இருப்பது தாலி மட்டுமே. கால மாற்றத்திற்கு ஏற்ப தாலி செயின்களிலும் பல மாற்றங்களையும், டிசைன்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மேளாவில் புதிய டிசைன்களான மீனாட்சி, சி.இசட் ஸ்டோன்ஸ் மற்றும் டைமண்ட், எங்கேயும் பார்க்காத தாலி முகப்பு செயின்களை நாங்களே டிசைன் செய்து அறிமுகம் செய்வதில் மிகவும் பெருமை கொள்கிறோம்.
இந்த மேளாவில் அனைத்து தாலி செயின் மற்றும் நீள செயின் ரகங்களுக்கும் சிறப்பு சலுகையாக சேதாரம் 3.99% முதல் 9.99% வரை மட்டுமே. டைமண்ட் முகப்பு, ஒரு காரட்டிற்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் பழைய தங்கத்தை கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். இம்மேளாவில் பங்கு பெற்று சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி உங்கள் இல்லத்திற்கு தங்கச் செழிப்பை கொண்டுச் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.