சென்னை, மார்ச் 13–
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட தி.மு.க.,வின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் டில்லியில் கைது செய்யப்பட்டார். அவரை, மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், ஏழு நாள் காவலில் எடுத்து டில்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உணவுப் பொருட்களுடன் போதைப் பொருட்களை கலந்து கடத்தலுக்கு உதவிய ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.