தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது.
“வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “
என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை.
” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க?
என்று ஆனந்த் கேட்க
‘‘ அவங்க இன்னும் அரை மணி நேரத்துக்கு வரமாட்டாங்க
என்றார் அருகில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னும் சில அரசாங்கப் பேருந்துகள் நின்றன. அந்தப் பேருந்துகளும் எடுக்கத் தாமதமானது.
” ஏன் எல்லா பஸ்ஸயும் இப்பிடி நிப்பாட்டி வச்சிருக்காங்க”
என்று சதீஷ் கேட்க
” இதுல ஒரு டிரிக் இருக்குங்க “
என்றார் இன்னொரு பயணி.
” என்ன டிரிக் “
என்று ஆனந்த் கேட்க
” இங்க இருக்கிற கண்டக்டர், டிரைவர்களுக்கு கமிஷன் இருக்குங்க “
என்று ஒருவர் சொல்ல
கமிஷனா?
என்று இருவரும் விழித்தார்கள்.
” ஆமாங்க. இந்த கண்டக்டர், டிரைவர் எல்லாம் பிரைவேட் பஸ்காரங்ககிட்ட லஞ்சம் வாங்கிட்டு முன்னால விட்டு , எல்லா மக்களையும் ஏத்திட்டு காசு, பணம் பாத்த பிறகு தான் இந்த பஸ்ஸ எடுப்பாங்க” என்று சொல்ல
” என்னங்க சொல்றிங்க?”
” ஆமாங்க. நிறைய ஊர்கள இப்படித்தான் பண்ணிட்டு “
என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ஒரு பஸ் வந்து நின்றது
” பஸ் அரை மணி நேரம் நிக்கும் “
என்றார் நடத்துனர்.
நிற்கும் பேருந்துகளைத் தாண்டி நிறையத் தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தன.