வர்த்தகம்

பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்

மதுரை, செப். 25-

போஸ்ட் பெய்ட் பிரிவில் ஜியோ போஸ்ட் பெய்ட் பிளஸ் என்னும் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஜியோ போஸ்ட் பெய்ட் பிளசின் முக்கிய நோக்கமானது சிறந்த இணைப்பு, பொழுதுபோக்கு மற்றும் அனுபவம் உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்குவதாகும்.இந்த ‘சிம்’ கார்டு இலவசமாக ஹோம் டெலிவரி செய்யப்படுவதோடு உடனடியாக ஆக்டிவேஷன் செய்யப்படும். எந்தவித காலதாமதமின்றி ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஜியோ எண்ணில் இருந்து அந்த எண்ணை மாற்றாமல் இதற்கு மாறலாம். ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் செப்டம்பர் 24 முதல் ஜியோ ஸ்டோர்களில் மற்றும் ஹோம் டெலிவரி மூலம் கிடைக்கும்.

இது குறித்து ஜியோ மேம்பாட்டு பிரிவு இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், தற்போது சரியான நேரத்தில் ஜியோ போஸ்ட் பெய்ட் பிளஸ் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ப்ரீபெய்ட் ஸ்மார்ட்போன் பிரிவில் 400 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். இதை எங்களின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். ஒவ்வொரு போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்பகமான மற்றும் உயர்தர இணைப்பு, எல்லையில்லாத பிரீமியம் பொழுதுபோக்கு அம்சங்கள், குறைந்த கட்டணத்தில் தடையில்லாத சர்வதேச ரோமிங், அதிநவீன புதிய அம்சங்கள் மற்றும் மிக முக்கியமாக வாடிக்கையாளர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கத்திற்கு இணையான தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில்இதை வடிவமைக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு அதை அறிமுகம் செய்கிறோம்.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு போஸ்ட்பெய்ட் பயனரும் அதை முழுமையாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸின் சில முக்கிய அம்சங்கள்:

பொழுதுபோக்கு பிளஸ்-நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான சந்தா -ஜியோ செயலி உடன் 650க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், வீடியோ, 5 கோடிக்கும் அதிகமான பாடல்கள், 300க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள். ரூ.250 இணைப்பில் உங்கள் முழு குடும்பத்திற்கான குடும்ப திட்டம் – 500ஜிபி வரை பயன்படுத்தாத முந்தைய டேட்டாக்களை பயன்படுத்தும் வசதி – இந்தியா மற்றும் வெளிநாடுகளுடன் வைபை அழைப்பு வசதி, வெளிநாட்டிற்குச் செல்லும் இந்திய பயணிகள் விமானத்தில் பறக்கும்போதும் பேசும் வசதி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அமீரகத்தில் இலவச இன்டர்நேஷனல் ரோமிங் வசதி, ரூ.1 கட்டணத்தில் வைபை மூலம் சர்வதேச ரோமிங் அழைப்பு, சர்வதேச அழைப்பிற்கு நிமிடத்திற்கு 50 பைசாவிலிருந்து கட்டணம் துவங்குகிறது. ஏற்கனவே ஜியோவில் உள்ள கிரெடிட் மூலம் தொடரலாம் அதே எண், உடனடியாக மாறலாம், இலவச ஹோம் டெலிவரி மற்றும் ஆக்டிவேஷன் பிரீமியம் கால் சென்டர் சேவை – ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் செப்டம்பர் 24 முதல் ஜியோ ஸ்டோர்களில் மற்றும் ஹோம் டெலிவரி மூலம் கிடைக்கும். ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு WWW.JIO.COM/POSTPAID ஐப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *