சிறுகதை

பொறாமை | ராஜா செல்லமுத்து

அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு காசு, 2 காசு என்று வாயைக் கட்டி , வயிற்றைக் கட்டி சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து இருக்கும் வீட்டை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தலாம் என்று நினைத்தார் வாசு.

அவர் இருக்கும் வீட்டை இன்னும் கொஞ்சம் பெரிதுபடுத்தி மேலே ஒரு மாடி கட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதற்கான எல்லா வேலைகளையும் ஆயத்தமாகச் செய்யத் தொடங்கினார்.

முதலில் ஒரு என்ஜினீயரை கூப்பிட்டு முதல் மாடி எழுப்பினால் என்ன செலவாகும்? என்று கணக்கு போட்டார். இன்ஜினீயர் ஒரு குறிப்பிட்ட தொகையை சொன்னார். அவர் சொன்ன தொகை வாசு கையில் இருக்கும் இருப்பு அளவிலேயே இருந்தது. அதனால் சீக்கிரம்வேலையை துவங்கலாம் என்று சொன்னார்.

என்ஜினீயர் ஒரு நல்ல நாளை குறிப்பிட்டு வேலையை தொடங்கலாம் என்று சொன்னார்.

அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது. முதலில் மணல் ,ஜல்லி, செங்கல் சிமெண்ட் என்று ஒவ்வொரு பொருளாக வந்து இறங்கியது. அதுவரையில் வாசுவின் வீட்டில் அருகிலிருந்த இருந்த ரங்கராஜன், வாசுவின் வீட்டிற்கு கட்டுமான பொருட்கள் வந்து சேர்ந்ததும் ரங்கராஜனுக்கு வயிறு எரிய ஆரம்பித்தது.

அது முதல் தினமும் ஒவ்வொரு பிரச்சனையாக சொல்லிக் கொண்டிருந்தார். தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லியபடியே இருந்தார்.

இங்கே மணல் கொட்ட கூடாது. இங்கே ஜல்லி கொட்டக் கூடாது. வேலை செய்யக் கூடாது என்று ஒவ்வொரு குறையாக சொல்லிக் கொண்டே வந்தார்.

இதனால் வாசுவிற்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டார் .அதை வெளிக்காட்டாமல் ரங்கராசுவிடம் முரண்படாமல் அன்பாகப் பேசினார்.

ஆனால் ரங்கராஜு அடிக்கடி வாசுவிடம் முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தார் .

இது வாசுவுக்கு தெளிவாக தெரிந்தது நாம் வீடு கட்டுவதால் தான் ரங்கராஜன் பொறாமை படுகிறார் என்பதை தெரிந்து கொண்டார்

இதை அவரிடம் சொல்லாமல் நாசுக்காக அவர் நடவடிக்கையில் அறிந்து கொண்டார்.

தன் நண்பர்களிடம் இதை சொன்னார். நண்பர்களும் ரங்கராஜனின் குணம் பற்றி தெரிந்து கொண்டனர் .

சிறிது நாட்கள் சென்றன

முதல் மாடி கட்டிடம் எழும்பியது ரங்கராஜன் ரொம்பவே வயிற்று எரிச்சல் பட்டார்.

இதற்கு ஒரு வழி செய்ய வேண்டுமே என்று யோசனை செய்தார் வாசு.

ரங்கராஜன் முன்னைவிட இப்போது அதிகமாகவே கோபப்பட்டார்.

ரங்கராஜனின் உண்மைத் தன்மையை நண்பர்களிடம் சொன்னார்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த வாசு,

ஒரு நண்பரிடம் சொன்னார்

என் வீட்டு பக்கத்து வீட்டு நண்பர் நான் இருக்கும் வீட்டின் மேலே ஒரு மாடி கட்டினேன். ரொம்பவே பொறாமை பட்டார்.

நான் ஒரு வேலை செய்தேன். என்ன தெரியுமா? என்று நண்பரிடம் கேட்டார் .

நண்பர்கள் பலவிதமான பதில்களைச் சொன்னார்கள்.

ஒருவர்

என்ன வீட்ட விட்டுட்டு போய்ட்டீங்களா? என்று ஒருவர் கேட்டார்.

இன்னொருவர்

உங்க பக்கத்து வீட்டு நண்பர் வீட்ட விட்டு போய்ட்டாரா? என்று அவர் கேட்டார்

வாடகைக்கு ஏதும் நீங்கள் விட்டு விட்டீர்களா?

என்று இன்னொரு நண்பர் கேட்டார்

இப்படியாக நண்பர்கள் ஆளுக்கு ஒரு பதிலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்

ஆனால்,

இது எதுவும் செய்யவில்லை என்று வாசு சொன்னார்

என்ன செய்தாய்? அதைச் சொல் என்று நண்பர்கள் கேட்டனர்.

‘‘முதல் மாடி கட்டியபோது பொறாமை பட்டார் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் ரங்கராஜன் …..’’

ஆமா என்றார்கள் நண்பர்கள்

இப்போது….

‘‘ நான் இரண்டாவது மாடி கட்ட துவங்கினேன்….’’ என்று வாசு சொன்னபோது,

கூடியிருந்த நண்பர்கள், குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள்

. இவர்களின் பயங்கரமான சிரிப்பை பார்த்து, தெருவில் இருப்பவர்கள் எல்லாம் இவர்களை ஒரு மாதிரியாக பார்த்து சென்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *