செய்திகள் நாடும் நடப்பும்

பொருளாதார சக்தியாய் சாதிக்க தயாராகும் இந்தியா

Makkal Kural Official

ஆர். முத்துக்குமார்


தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வல்லமை கொண்டு இருக்கிறது. அதை கொண்டு இந்தியா புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னுரிமை கொடுத்து வருகின்றது. இதில் புதிய உற்பத்தித் திறன்களை உருவாக்குவதற்காக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களை ஒருங்கிணைப் பதுடன், வேளாண்மை மற்றும் பாரம்பரிய தொழில் களையும் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி மேம்பட தயாராகி வருகிறோம்.

நவீனமயமாக்கல் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் எல்லாத் தரப்பு மக்களையும் மேம்படுத்துவது மிக அவசியமான ஒன்று, காரணம் வறுமையில் இருப்பவர்கள் இனி வரும் காலத்திலும் நிதி வசதிகளில் முன்னேற்றம் காண முடியாது தவித்தால் சமூக அநீதிகளே பெருகும் அபாயம் உள்ளது.

அறிவியல் ஆராய்ச்சிகளிலும் தொழில்நுட்ப நவீனங்களுக்கும் நம்பிக்கை மிக முக்கியம் .

அதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்தாக வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் இன்னும் வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதார தடைகள சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு மிகப்பெரிய தடைகளாக இருப்பதை அறிவோம், அதில் இந்தியா உலகமே அசந்து பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தாக வேண்டும்.

ஜப்பான் எப்படி வளர்ந்த நாடாக பார்க்கப்படுகிறது? அணு ஆயுதங்களின் விளைவுகளையும் சந்தித்தனர், அது அவர்களின் தேசப்பற்றை வளர உதவியது, ஆட்சியை பிடித்த அரசியல் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் மக்கள் நலன் மீது முழுக் கவனம் செலுத்தியே பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

நவீனமயமாதலில் ஜனநாயகத்தின் பங்கு இந்தியாவின் இன்னொரு முக்கியமான பலம்! நமது மக்களின் முழு ஈடுபாட்டுடனான ஜனநாயகம், அவர்களின் பங்கேற்பு வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கின்றது. இதனால் உலகத் தரமான முடிவுகளை உருவாக்க உதவுகிறது.

ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளோர் அனுபவிக்கும் ஒரு வாழ்க்கைத் தரத்தைக் நம் பின்தங்கிய கிராம பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும் , அதற்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புற நவீனமயம் அவசியமாகுகிறது.

நகரங்களில் உள்ள சாலைகளும் பொதுவெளி கட்டுமானங்களுமே மேம்படாத நிலையில் அரசு திட்டங்கள் கிராமபுற மேம்பாடுகளுக்கு செல்வது சாத்தியமற்றதாக இருக்கிறது.

கிராமப்புறங்களில் ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் கல்வி நவீனமயமாதல் அனைத்துப் பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

போதுமான வீடுகள்,

நிரந்திரமாக தண்ணீர் வழங்கல், சுகாதாரம்,

போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துதல்,

சுற்றுச்சூழலை பாதுகாத்தல்,

பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்கல் ஆகிய

இந்த சவால்களை தீர்க்க, பலதரப்பட்ட அணுகுமுறை மற்றும் பெரும் முதலீடுகள் தேவை.

பசுமை அதிகரிப்பு மற்றும் நச்சுப்புகை குறைத்தல் இந்த நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதியின் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

பசுமை மய போக்குவரத்து இந்தியாவின் மேம்பாட்டு முன்னுரிமைகளாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்.

அதன் நிலையான மேம்பாட்டிற்கு முதலீடுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பும் தேவை. நமது அருகாமை நாடுகளான சீனா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான், துபாய், இலங்கை மற்றும் தென் கொரியா போன்ற பல நாட்டுகளுடன் உறவுகளை

இது போன்ற சங்கதிகளில் மேம்படுத்த வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

மேலும் சமீபத்து பட்ஜெட்டில் எதிரொலிக்கும் ஓர் அம்சம் சீனாவின் சப்ளை சங்கிலிகளில் இந்தியா தன்னை இணைத்து வரும் காலகட்டத்தில் சீன முதலீட்டாளர்களின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதாக இருக்கிறது.

இது பொருளாதார ரீதியாக வரவேற்க வேண்டியதுதான், இது இந்தியாவில் நிறுவப்பட்ட உற்பத்தி வளாகங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சுறுசுறுப்பாய் செயல்பட வைத்து விடும்.

இந்தியாவின் தயாரிப்பு திறன் நவீனமாகி விட்டால் உற்பத்தி பெருக்கம் காரணமாக புதுப்பது வேலை வாய்ப்புகள் உருவாகி தனி நபர் வருமானம் உயர வழிவகுக்கும்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற சவால்களைத் தீர்த்து, பசுமை முன்னுரிமைகளை முக்கியமாகக் கொண்டு, சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா ஒரு நவீன மற்றும் செழிப்பான சமுதாயமாய் உயர வழிபிறக்கும்.

இந்தியா தற்போது தொழில்நுட்பத் துறையில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஒரு காலத்தில் தொழில்நுட்பத்திற்கு பின் தங்கியிருந்த நாடு இன்று உலகின் முன்னணி தொழில்நுட்பக் களமாக உருவெடுத்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன.

தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, தொழில் முனைவோர் கலாச்சாரம், கல்வித்துறையில் முதலீடு.

முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சிகள்:

மொபைல் தொழில்நுட்பம்: இந்தியாவில் மொபைல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள், இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் இன்று அனைவரும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன.

இணையதளம்: இந்தியாவில் இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களிலும் இணையதள வசதி கிடைக்கத் தொடங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம், நிதி மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

பிக் டேட்டா: பிக் டேட்டா தொழில்நுட்பம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மார்க்கெட்டிங், நிதி மற்றும் அரசு போன்ற துறைகளில் பிக் டேட்டா தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியா தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா உலகின் முன்னணி தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *