சிறுகதை

பொய்க் கணக்கு – ராஜா செல்லமுத்து

ஒரு நற்பணி இயக்கத்தில் இறப்பு பிறப்பு, நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் அந்த இயக்கத்தின் மூலமாக அந்த வீட்டிற்குப் போய் சிறிய நன்கொடையும் அல்லது அவர்கள் செய்யும் விழாக்களுக்கு தகுந்த மாதிரி பரிசுப் பொருட்களை கொடுத்து வருவது அந்த நற்பணி இயக்கத்தின் பணி.

நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் என்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். 2000 நபர்களும் இன்று நிர்வாகத்தை நிர்வகிக்க முடியாது என்பதால் சில நிர்வாகிகளை நியமித்திருந்தார்கள்.

அவர்கள் நல்லது கெட்டதுக்கு வேண்டியதை செய்வார்கள். அவர்கள் அத்தனையையும் பார்த்துக் கொள்வார்கள். ஒரு திருமணம் என்றால் கிப்ட் வாங்கி கொடுப்பதும். இறப்பு என்றால் இறந்த வீட்டிற்கு சென்று இறந்தவருக்கு மாலை வாங்கிப் போடுவதும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேலையாக இருந்தது.

எல்லாத்திற்கும் கணக்கு பார்க்கும் நற்பணி மன்றம் இறப்பிற்கு மட்டும் கணக்குப் பார்ப்பதில்லை.

ஏதோ ஒரு வீட்டில் மரணம் சம்பவித்தால் அந்த மரணத்திற்கு நற்பணி இயக்கத்தில் உள்ளவர்கள் சென்று மாலை வாங்கி போட்டு வருவார்கள். அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார்கள்? எப்போது போட்டார்கள்? என்பதை எல்லாம் கணக்கு பார்க்க மாட்டார்கள்.

அதே திருமணம் வேறு விஷயம் என்றால் தோண்டித் துருவி கணக்கு கேட்பார்கள். இந்த மரண வீட்டு மாலை தான் நிர்வாகத்தில் உள்ள சிலருக்கு சாதகமாக அமைந்தது .

விரிந்து பறந்த ஊர் என்பதாலும் 2000 நபர்களுக்கு மேல் உறுப்பினர்களாக இருப்பதாலும் அவர்களால் ஒவ்வொரு வீட்டிலும் நேரடியாக சென்று இன்னது நடந்ததென்று தெரிந்து கொள்ள முடியாது .

நற்பணி இயக்கத்தில் இருந்து என்ன செய்தார்கள்? என்று கேட்க முடியாது என்ற காரணத்தை பயன்படுத்திக்கொண்டு இயக்கத்தில் இருந்த நிர்வாகிகளான தரன், குருபரன் சில தவறுகள் செய்ய ஆரம்பித்தார்கள்.

எப்படி என்றால் உதாரணமாக யாரோ ஒருவர் வீட்டில் ஒரு உறுப்பினர் ஒருவர் வீட்டில் மரணம் சம்பவித்தால் அவர்கள் மரணத்திற்கு போவார்கள். மரணத்தில் கலந்து கொள்வார்கள்; ஆனால் மாலை வாங்கிப் போட மாட்டார்.

ஆனால் நற்பணி இயக்கத்தில் மாலை வாங்கிப் போட்டதாக கணக்கு எழுதப்பட்டிருக்கும்.

ரூ.500க்கு மாலை வாங்கி போட்டிருக்கிறார்கள் என்று கணக்கெழுதுவார்கள். நற்பணி இயக்கத்தில் உள்ளவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

மரணத்தில் கணக்குப் பார்ப்பதாக கணக்கு கேட்கமாட்டார்கள் என்று யாரும் பார்க்க மாட்டார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் இஷ்டத்திற்கு விளையாட ஆரம்பித்தார்கள் .

உறுப்பினர் வீடுகளில் மரணம் சம்பவிக்கும் போது வெறும் கையை வீசிக்கொண்டு மரணத்தில் கலந்து கொள்வார்கள். இல்லை சில நேரங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பார்கள்.

ஆனால் நற்பணி மன்றத்தின் கணக்கில் மட்டும் மாலை போட்டதாக எழுதப்பட்டிருக்கும். பணம் எடுக்கப்பட்டிருக்கும்.

இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நற்பணி மன்றத்தினர் ஒரு நாள் ஒரு இறப்பில் சில நற்பணி இயக்கத்தில் இருந்த சிலர் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது .

பொறுப்பில் இருந்தவர்கள் அந்த மரணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். பணத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளும் அந்த இறப்பில் கலந்து கொண்டிருந்தார்கள்

அப்போது, இரண்டு மூன்று நாட்கள் கழித்து நிர்வாகிகள் இறந்தவருக்கு மாலை போட்டதாக கணக்கு எழுதி இருந்தார்கள்.

அப்போது தான் பெரிய பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு தெரியவந்தது.

என்ன தரன் மாலை வாங்கி போட்டிங்களா? என்று நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் கேட்டார்

குருபரன் ஆமா என்று தலையாட்டினான்.

ஓஹோ…. எவ்வளவுக்கு மாலை வாங்கினீங்க… என்று கேட்க

500 ரூபாய்க்கு மாலை வாங்கினோம் என்று தரன் சொன்னார்.

அப்படின்னா நேத்து இறந்த வீட்டுக்கு நீங்க மாலை வாங்கி போட்டீங்க. அப்படித்தானே என்று கேட்டபோது ,

ஆமா என்ற தரனும் குருபரனும் தலையாட்டினார்கள்.

அது பெரிய வீடு என்பதால் அந்த வீட்டை சுற்றி கேமராக்கள் இருந்தது .

அந்த கேமராவில் பதிவு செய்த செய்யப்பட்ட காட்சிகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் நிர்வாகிகள் .சில நாட்கள் கழித்து அந்த வீடியோவை அந்த சிசிடி காட்சியை பார்த்தார்கள் நிர்வாகத்தினர். தரனும், குருபரனும் அங்கு இறந்தவருக்கு மாலை வாங்கி போட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என்பதற்கு படம் இல்லை.

இதைப்பார்த்த நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது .

அப்படின்னா இவங்க இறந்ததுக்கு நான் மாலை போட்டேன்னு கணக்கு எழுதி வைக்கிறது எல்லாம் பொய்யா? எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்காங்க. இவங்கள வாட்ச் பண்ணனும் என்று முடிவெடுத்த நிர்வாகத்தினர்கள்.

அதுபோலவே

சிலநாட்களில் ஒரு உறுப்பினரின் தந்தை வயோதிகத்தின் காரணமாக மரணமடைந்தார்.

அங்கேயே பணத்தை கையாளும் அவர்களை அனுப்பி வைத்தார்கள் நிர்வாகத்தினர் .

உறுப்பினர்கள் நிர்வாகத்தில் இருந்த தரனும் குருபரனும் இறப்பில் போய் கலந்து கொண்டு வெறும் கையை வீசிக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் அவர்கள் நற்பணி இயக்கத்தின் கணக்கில் மாலை வாங்கி போட்டதாக கணக்கு எழுதினர்.

இதைப் பார்த்த நிர்வாகத்திற்கு கோபம் வந்தது .

எவ்வளவு நாளா இந்த வேலை நடக்குது ? என்று கோபமாகக் கேட்டார் தலைவர்.

என்ன? என்று தெரியாது விழித்தான் .

மாலையே வாங்கி போடாம மாலை வாங்கி போட்டதா கணக்கு எழுதறீங்க. அசிங்கமா இல்ல. ஒரு இறந்தவருடைய ஆத்மா கூட நீங்க விளையாடுறீங்க . உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதுனால தான் நேர்மையான ஆளுடைய நேர்மையைக் கூட பரிசோதிக்க வேண்டியிருக்குது. நீங்க பண்றது தவறு ; இனிமேல் இந்த நிர்வாகத்தில் உங்களுக்கு இடமில்லை என்று அனுப்பி வைத்தார்கள்.

தாங்கள் செய்த தவறை எண்ணி வெட்கித் தலை குனிந்தார்கள் தரனும், குருபரனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *