செய்திகள்

பொன்னேரியில் நெல் அறுவடை நடைபெறும் பகுதிகளை இந்திய அணு விஞ்ஞானி செல்லப்பா ஆய்வு

Makkal Kural Official

பொன்னேரி ஜன-29

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்தில் தமிழகத்திலேயே தஞ்சாவூருக்கு அடுத்ததாக நெல் பயிர் விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அறுவடை பருவ காலத்தின் போது திடீர் மழை பெய்ததால் விவசாயிகள் அறுவடை செய்வதற்கு தயங்கினர். வயல்களில் மழைநீர் தங்கியதாலும், நெற்பயிர்கள் படுத்து கொண்டதாலும்விவசாயிகள் அச்சத்திற்கு ஆளாயினர். நல்வாய்ப்பாக மழை முற்றிலும் விட்டதால் அவசர கதியில் விவசாயிகள் அறுவடையில் இறங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து இந்திய அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா இப்பகுதி விவசாயிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு மாவட்ட விவசாய துணை அலுவலர்களுடன் அறுவடை நடைபெறும் மெதுர் பகுதிக்கு வருகை தந்தார் அங்கு அறுவடையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பயிரிடப்படும் நெல் வகைகள், அதிக மகசூலை தரக்கூடிய நெல் ரகங்கள், நீர் மற்றும் நிலத்தின் தன்மை, அறுவடை செய்யப்படும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பரிக்குப்பட்டு என்னுமிடத்தில் அறுவடை நடைபெறும் பகுதிக்கு சென்று பார்வையிட்டு அறுவடைக்குப் பிறகு நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்தார். பின் இதன் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட விவசாய துணை அலுவலகத்தில் இது குறித்து மறு ஆய்வு கூட்டம் நடைபெறும் எனவும் அதற்கான ஆயத்த பணிகளை விவசாயத்துறை அதிகாரியுடன் மேற்கொண்டு இப்பகுதியின் வேளான் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற ஆராய்ச்சி உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குனர் (மாநில திட்டம்),உதவி இயக்குநர் டில்லிகுமார் வேதவள்ளி,வேளாண்மை அலுவலர் செல்வகுமார், பூமதி,நவீன்குமார் மற்றும் விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *