சிறுகதை

பொத்திவச்ச மல்லிகை மொட்டு | ராஜா செல்லமுத்து

Spread the love

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே என்ற பாடல் கேட்கவில்லை ஆயிரம் வாலா பட்டாசுகள் எங்கும் வெடிக்கவில்லை.
டம… டம… டும்.. டும் .. டா என்ற மேள தாளங்கள் வெட்கம்மின்ன கன்னத்தில் கைவைத்து பல விதமான் பாவனைகளில் பூப்பெய்திய பெண்ணின் ப்ளக்ஸ் கட் அவுட்டுகள் இல்லை .
வரிசையாக பழம் சீர்வரிசைகள் சுமக்கும் தாய்மாமன் செய்முறைகள் இல்லவே இல்லை . அரசியல் தலைவர்கள் பெரிய மனிதர்களின் வாழ்த்துக்களோ ? வயதுக்கு வந்த பெண்ணை மேடையில் அமரவைத்து அவளைக் காட்சிப்பொருளாக காட்டும் சம்பிரதாயங்களும் அங்கு அறவே இல்லை.
ஒரு தெருவில் இது அத்தனையும் தாண்டி வித்யாசமாய் நடந்து கொண்டிருந்தது பூப்புனித நன்னீராட்டு விழா.
ஏய்…. கனிஷ் இங்க வா நான் இங்க இருக்கேன். நீ பொய் சொல்ற நீ அங்க இல்ல.
ஏய்…. இங்க பாருடி எனப் பூப்பேய்திய கனிஷ் நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாள்.
சரி இப்ப நாம் டான்ஸ் ஆடுவோமா?
ஓ கே வயதுக்கு வந்த கனிஷ் உட்பட மேடையில் குழந்தைகள் ஆடியும் விளையாடிக் கொண்டிருந்தனர் . தூரத்தில் வாழைப்பழம் தட்டோடும் மேளதாளத்தோடும் விவரம் தெரியாத ஒருவன் ஆட்களோடு வந்து கொண்டிருந்தான்
ஏய்… எங்க போற?
கனிஷ் வயசுக்கு வந்திட்டாளே அந்தப்போண்ணு . எங்க அக்கா மக அதான் அவ.
ஓ … ஆமா அதுக்கு இப்ப தான் போரியா?
ஆமா அதுக்கு தான் செய்முறை செய்யப்போயிட்டு இருக்கேன். இதைக்கேட்டவன்
டேய் லூசுப்பயலே உனக்கு விசயம் தெரியாதா?
அங்க போய்ப்பாரு என்று சொன்ன போது ,
என்னய்யா பூடகம் போடுறீங்க என்று சொல்லிக்கோண்டே நடந்தனர் ஆட்கள்.
சிறிது தூரம் சென்றவன் ,
ஆமா ரேடியா சத்தம் எதுவும் கேக்கலையே
கனிஷுக்கு தாய் மாமன்கள் நிறைய இருக்காங்களே. கொட்டு மேளம் பட்டாசு சத்தம் எதுவும் எங்கயும் வெடிக்கலையே. குழம்பிப்போனவன் சீர்வரிசைகளோடு நடந்து கொண்டிருந்தான்.
விழா வீட்டை நெருங்க நெருங்க சீர்வரிசை கொண்டு வந்தவனுக்கு சுரீரென்றது .
ஆமா இவனுக சொன்னது உண்மை தான். வயசுக்கு வந்த புள்ள மேடையில் புள்ளைகளோட விளையாடிட்டு இருக்கு. டாக்டர்கள் இருக்காங்க. கூட இன்னும் நிறையப்பேரு இருக்காங்களே. இங்க என்ன நடக்குது. பூப்புனித நன்னீராட்டு விழாவா? இல்ல இது வேற எதுவுமா? என்று குழம்பியவன் வந்துகொண்டிருந்த சொந்த பந்தங்கள் சீர்வரிசைகளை இறக்கி ஓரமாக வைத்தார்கள்.
இது என்ன கூத்தா இருக்கு. இது எங்கயும் நடக்காத திருவிழாவா இருக்கே.அப்பிடியுமா செய்வாங்க. கனிஷ் அப்பாவுக்கு மூளைகீளை கெட்டுப்போச்சா?
அவனவன் சீர் செனத்தி வாங்கி காசு பணத்த சேத்து வைக்கணும்னு நினைச்சிட்டு இருக்காங்க. இங்க என்னடான்னா என்னமோ நடந்திட்டு இருக்கு என்று அங்கு நடப்பது எதுவும் தெரியாதவர்கள் கேள்வி கேட்டனர்.
கனிஷ் மற்ற சிறுமிகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்பா இவ என்னைய அடிக்கிறா என்று அப்பா மோகனிடம் கூற
ஏய் சேந்து விளையாடுங்க என்று அம்மா புவனாவும் அதையே சொல்லி மேடையில் இருந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
டாக்டர் வயசுக்கு வந்ததும் பெண்களோட உருவம் மாறுபடுமா?
ஆமா நிச்சயம் உடல் ரீதியா மாற்றம் ஏற்படும் மன ரீதியாவும் மாறுபடும்.
டாக்டர் வயசுக்கு வந்த நேரங்கள்ல எந்த மாதிரியான உணவுகள எடுத்துக்கிரணும் என்று ஒரு பெண் கேட்க
நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளச் சாப்பிடனும்.
அப்ப நேரங்கள்ல பழம் அதிகம் சாப்பபிடுறது நல்லது. இப்படியாய் அந்த மேடையில் நிறைந்திருந்த மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் ஏது ஏதோ கேள்விகள் கேட்கும் அத்தனை பேருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்
இது என்ன புதுசாயிருக்கு
பூப்புனித நீராட்டு விழாங்கிறது கொட்டடிச்சு சண்ட சத்தம் தாய்மாமன் ரவுசு கொட்டடிச்சு சண்டசத்தம் விசயத்த இவங்க என்னமோ செய்றாங்க. இங்க எல்லாமே ஒரு மாதிரியா இருக்கு. இங்க வந்திருக்கிறவங்க எல்லாம் என்னென்னமோ கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க . அதுக்கு டாக்டர்களும் பதில் சொல்றாங்க.
இது என்ன விழா புதுசா இருக்கே என்று வந்தவன் கேட்க……
பந்தலில் உட்கார்ந்திருந்தவர்களில் முதலில் கேள்விகள் கேட்கக் கூச்சப்பட்டவரகள் பின் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்
எல்லாரும் இங்க பாருங்க ஒரு பெண் பெரிய மனுசியாகிட்டான்னு சொல்றது ஒரு சடங்கா ஒரு விழாவா அவள ஒரு காட்சிப்பொருளா ஒக்கார வச்சு மஞ்சள் பூசி யார் யாரோ பேசி அவள தப்பா சித்தரிச்சு அவ பெரிய மனுஷியாகிட்டா குழந்தை பெத்துக்கிறதுக்கு தயாராகிட்டா. வாங்க பொண்ணு கேளுங்கன்னு காலங்காலமா பொண்ணுங்கள புள்ளப்பெற்றெடுக்கும் மிஷின்மாதிரி சோடனை செஞ்சு வச்சது போதும். இனியும் இந்தப் பொண்ணுங்கள விழா வச்சு போஸ்டர அடிச்சு அவங்கள தனிமைப்படுத்துனது போதும். ஒரு பொண்ணு பூப்படையிறது மருத்துவம் சார்ந்த விசயம். அவ உடல் ரீதியா மாற்றம் அடையுற விசயம். இதை இப்பிடி ஒரு மருத்துவ விழாவா மாத்துன மோகன் குடும்பத்தார்க்கு நாம நன்றியைத் தெரிவிக்கலாம்.
இவங்கள பாராட்டலாம். எல்லாரும் இவங்க பண்ணுனதையே பின்பற்றுங்க. இது சடங்கில்ல மருத்துவம் சார்ந்த விசயம்னு புரிய வையுங்க. இது எல்லா இடங்கள்லயும் பரவுச்சுன்னா நல்லது என்று மேடையிலிருந்த ஒரு மருத்துவர் சொல்ல……
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் வியப்பு மேலிட்டது.
வயசுப்பெண் கனிஷ் அப்பவும் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் மறைமுகக் கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள் அந்த இடமே வேறு மாதிரியான வடிவத்தில் இருந்தது. பெண்மையைப் போற்றுவோம். முகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் என் பேனரில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் பூப்பெய்திய மல்லிகை மொட்டு கனிஷ்.
பூப்பதில் பெருமை கொள்கின்றன பூமொட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *