காதல் என்பது முன்பெல்லாம் பார்த்துக் கொள்வது; ஆள் இல்லையென்றால் ஏதோ ஒன்று பேசிக்கொள்வது .காதல் கடிதங்கள், செய்கை என்று நாகரீகமாக இருந்தது காதல்.
ஆனால் இன்று அத்தனையையும் உடைத்து தவறுதலான இடத்திற்குக் கொண்டு செல்கிறது காதல்.
ஒட்டி உரசி உட்காருவது. பொது இடங்களில் ,பொது வெளியில் நாகரிகம் அற்ற முறையில் நடந்து கொள்வது . இருசக்கர வாகனங்களில் கொஞ்சம் கூட அசிங்கம் இல்லாமல் பயணம் செய்வது .பெரியவர்கள் மூத்தவர்கள் இருக்கிறார்கள் என்ற மரியாதை கூட இல்லாமல் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து செல்வதுதான் இன்றைய காதல் என்று இளசுகள் நினைக்கிறார்கள்.
ஆனால், அது எவ்வளவு ஆபத்தான அபத்தமான ஒன்று என்பதை கரணின் காதல் நிரூபனம் செய்தது. கரண் அவன் காதலி கங்கா இருவரும் நாகரீக வாழ்க்கையில் இணைந்திருந்தார்கள்
அவர்கள் இருவரும் பொது வெளி, இரு சக்கர வாகனம் என்று தங்களின் நாகரீகமானக் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சந்தோசம் எல்லாம் அவர்களுக்கு கிடையாது.
நாங்கள் எல்லாம் உல்லாச பறவைகள் என்று பூமியில் நடக்கும் போதே வானத்தில் பறப்பதாக கற்பனை செய்து கொள்வார்கள். அப்படி இருந்தவர்கள் ஒரு நாள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஒதுங்கினார்கள்.
மாலை மயங்கி இருள் கவிழும் நேரம் .காதலன், காதலி இரண்டறக் கலந்திருந்து தங்களை மறந்து இருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு மூன்று முரடர்கள் கரணை தாக்கி காதலி கங்காவை காெணர்ந்தார்கள்.
ஐயோ என் காதலி, காதலி என்று அழுதான். இது எதையும் சட்டை செய்யாத மூடர்கள் கங்காவை கவர்ந்து இழுத்துச் சென்று மானபங்கப் படுத்தும் போது, தமிழ் சினிமாவில் அப்போதுதான் வரும் கதாநாயகன் போல தமிழமுதன் வந்து இறங்கினான்.
கயவர்களை அடித்து நாெறுக்கினான்.
காதலர்கள் இருவரும் அழுது தொழுது தமிழமுதன் காலில் விழப் போனார்கள் .
இது தவறு. நீங்கள் லவ் பண்றீங்க அது நாகரீகமா இருக்கணும். ஒரு பெண் ஒரு ஆண் கூட இவ்வளவு வயப்பட்டு இருக்கிறாள் அப்படிங்கற விஷயம் பாக்குறவனுக்கு தவறாத் தெரியுது. நீங்க அது காதல்னு நினைக்கிறீங்க .
ஆனா பொது வெளியில பாக்கிறவங்களுக்கு நீங்க இச்சப்பட்டவங்கன்னு தெரிய வருது .
அதனால தான் மத்தவன் இத ஈசியா எடுத்துக்கிறான் .ஒரு ஆண் கூட மயக்கத்தில் இருக்கிற பெண் இன்னொரு ஆணுடன் ஏன் இருக்க மாட்டா? அப்படிங்கிற தவறான அபிப்பிராயம் தான் அந்தப் பெண் மேல வந்து விழுது .அதனால தான் இவங்க தப்பு செய்றாங்க. அதுக்கு காரணம் நீங்கதான். மரியாதையா நாகரிகம் அமர்ந்திருந்தா யாரும் உங்கள தொந்தரவு செஞ்சிருக்க மாட்டாங்க .ஆனா நீங்க செஞ்ச செய்கை தான் உங்க நடவடிக்கை தான் உங்க கேரக்டர அவங்களுக்கு தப்பா காமிச்சிருக்கு. தவறு அவங்க பேர்ல இருந்தாலும் தப்பு உங்க பேர்ல இருக்கு. இனிமேலாவது பொது வெளியில நாகரிகமா நடக்கப் பாருங்க. அது உங்க கேரக்டரை ஸ்பாயில் பண்ணாம இருக்கும். அதனாலதான் தவது நடந்திருக்கு என்று சொல்லிவிட்டுச் சென்றான் தமிழமுதன்,
கரண் ,கங்கா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். தமிழமுதன் சாென்னது சரியானது தான் என்று உணர்ந்து கொண்டார்கள்.
அதிலிருந்து எந்த இடங்களுக்குச் சென்றாலும் இருவருக்கும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.
மருந்துக்கு கூட அவர்கள் தொட்டுக் கொள்வதில்லை. இப்போது எல்லாம் நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதலர்களை அவர்கள் தங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லி தவறுக்கு முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
கரணும் கங்காவும் காதலர்களுக்கு ஒரு பாடமாகவே மாறிப் போனார்கள்.