சென்னை, அக். 13–
பொதுவெளியில் மனம் விட்டு உண்மையை பேசுவதற்கு வலிமையான உள்ளம் வேண்டும். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என்று தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தனது டுவிட்டரில் இன்று தெரிவித்துள்ளதாவது:–
முதல்வருக்கு பாராட்டு
பொதுவெளியில் மனம் விட்டு உண்மையை பேச வேண்டும் என்றால், ஒருவருக்கு வலிமையான உள்ளம் வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று பொதுவெளியில் அனைவரிடமும் உண்மையைப் பேசியுள்ளார். இன்றைய நாளில் நேரிடையாகவும் வெளிப்படையாகவும் இதுபோல் அச்சமற்று பேசுவது, முதலமைச்சர் ஸ்டாலினின் வலிமையைக் காட்டுகிறது. அவர் மிகவும் உயர்ந்து நிமிர்ந்த்து நிற்கிறார். இவ்வாறு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.