சிறுகதை

பொதுநலம் – ராஜா செல்லமுத்து

நகரத்திலிருந்து நெடும் தூரத்திலிருந்தது அன்னை வயல் கிராமம். அந்தக் கிராமத்தில் நிறைய பேர் நகரத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவதற்கு 10, 15 கிலோமீட்டர்கள் பஸ்ஸில் தான் வர வேண்டும். எப்போதாவது ஒருமுறை தான் அங்கு பஸ் இருக்கும். அவர்கள் காலையில் இருந்து இரவு வீடு திரும்பும் வரை அவர்களுக்கு பஸ் பயணம் என்பது மிகவும் குறைவு.

அப்படியிருக்கும் அந்த கிராமத்தில் நிறைய குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்தது, அந்தக் கிராம். நோய்க் காலத்தில் நேரடி வகுப்புகள் எடுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகளாக நடத்திக் கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள்.

அப்போது ஒரு சிலர் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் மீதமுள்ளவர்கள் படிக்கும் அவல நிலை ஏற்பட்டது. 10 பேருக்கு ஒரு செல்போன் என்று படிக்க ஆரம்பித்தார்கள் மாணவர்கள்.

அவர்களுக்கு கிராமம் என்பதால் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை உயரமான மரங்களில் ஏறி அமர்ந்து கொண்டு அபாயகரமாக படித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சரியான மதிப்பெண் தர முடியாது என்று சொன்னார்கள்.

அதனால் மாணவர்கள் தங்கள் உயிர்களை துச்சமாக மதித்து ஆன்லைன் வகுப்புகள் படித்துக் கொண்டிருந்தார்கள். வசதி வாய்ப்புகள் அற்ற அந்த கிராம வாசிகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் என்பது ஒரு பெரிய விஷயமாகத் தெரிந்தது.

அதனால் இதைத் தெரிந்து கொண்ட சூர்யா, அந்த கிராம மக்களை சந்தித்தார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். நிறைய மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்று அந்த கிராமத்தில் அதிக பேர் இருந்தார்கள்.

ஆனால் வசதி மட்டும்தான் குறைந்திருந்தது. அத்தனை மாணவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார் சூர்யா.

அடுத்த நாள் ஒவ்வொருவரின் கையிலும் ஆண்ட்ராய்டு செல்போன். அந்த குழந்தைகளின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தன் கையில் உலகமே வந்து விட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.

தங்கள் கைகளில் படம் தெரிவது. ஆசிரியர்கள் முகம் தெரிவதும் என்று அந்த செல்போன் அவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சூர்யாவை அந்த கிராமமே வாழ்த்தினார்கள்.

அதுமட்டுமல்ல செல்போன்களை வைத்துக்கொண்டு, சரியான சிக்னல் கிடைக்காததால் மரங்களில் ஏறி படித்துக்கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து ரொம்பவே பரிதாபப் பட்டார் சூர்யா.

மறுநாள் அந்த கிராமத்தில் இரண்டுக்கு மேற்பட்ட செல்போன் டவர்கள் ஊன்றப்பட்டன. அவர்களுக்கு இது பெரிய ஆச்சரியம்.

இனி அவரவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கிளாசை கவனிக்கலாம் என்று செல்போன் டவர் வந்தது.

யாரிந்த சூர்யா? என்றவர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

அந்த கிராமத்தில் படித்தவர் தான் அந்த சூரியா. அவர் எப்படி கஷ்டப்பட்டு படித்து அந்த கிராமத்தில் இருந்து முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.

தான் படித்த நிலை அதே இடத்தில் இருந்தது. எத்தனையோ மனிதர்கள் அந்த கிராமத்திலிருந்து படித்து முன்னேறி இருக்கிறார்கள் ஆனால் ஒருவர்கூட அந்த கிராமத்திற்கு எதுவும் செய்யவில்லை.

ஆனால் சூர்யாவிற்கு பொது நலன் இருக்கிறது.

அவ்வளவு சிரமம், கஷ்டப்பட்டு படித்து முன்னேறி இந்த அளவிற்கு அவர் உயர்ந்து அரசாங்கத்தினுடைய உயர்பதவியில் இருக்கிறார் என்றால்

இந்த கிராமத்து மாணவர்கள் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தால், தன்னை விட இன்னும் உயர்ந்த இடத்திற்கு வருவார்கள் என்று சூரியா அவர் இப்படி செய்திருக்கிறார் என்று அந்த கிராம மக்களுக்கு தெரிந்தது.

சூர்யா இவ்வளவு செய்து இருக்கிறார் என்று அந்த கிராமத்தில் படித்து நல்ல நிலைமையில் இருக்கும் மற்ற ஆட்களுக்கும். தெரிந்தது.

அவர்களும் நாங்கள் ஒன்றும் சூர்யாவை விட குறைந்தவர்கள் அல்ல என்று அறிந்து கொண்டு அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு மனிதன் தான் பிறந்த கிராமத்தையும், தான் பிறந்த வீட்டையும், தன் பிறந்த நாட்டையும் நேசித்தால் ஒவ்வொருவரும் இதை செய்தோமே ஆனால் நாடு தானாக முன்னேறும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் சூரியா.

தான் பற்ற வைத்த தீ, இப்போது பற்றிக் கொண்டது என்று நினைத்தபடியே சிரித்துக் கொண்டான் சூரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *