வாழ்வியல்

பொடுகு வரக் காரணம்

வறண்ட சருமம் ; தோல் அழற்சி; தலையில் அரிப்பு போன்ற காரணங்களால் பொடுகுத் தொல்லை தோன்றும். மன அழுத்தம்; நோய் எதிர்ப்பு சக்தி குறைவு; நரம்பியல் கோளாறு போன்றவைகளாலும் பொடுகு ஏற்படும்.

தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.

சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும்.

சரும அழற்சி ஏற்பட்டிருந்தால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது, திட்டுக்கள் தோன்றுவது, மஞ்சள் நிறத்தில் செதில்கள் தென்படுவது போன்றவை தோன்றும்.

தலைமுடி நரைப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. இருப்பினும் மன அழுத்தம், எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் சிலருக்கு தலைமுடி நரைக்கும். மன அழுத்தத்தால் நிறமிகளை உருவாக்கும் செல்கள் பாதிப்படையும். அதனால் விரைவாகவே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *