செய்திகள்

பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்தது

Spread the love

சென்னை, செப். 12

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரெயில் டிக்கெட் ஜனவரி 10ம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது.

சென்னையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், 2020ம் அண்டு ஜனவரி 14ந் தேதி (செவ்வாய்) போகிப் பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. அடுத்த நாள் 15ந் தேதி (புதன்) பொங்கல், 16ந் தேதி (வியாழன்) மாட்டுப் கொங்கல், 17ந் தேதி (வெள்ளி) காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

பொங்கலுக்கு முன்பு ஜனவரி 13ந் தேதி திங்கள் மட்டுமே வேலைநாள். அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஜனவரி 11ந் தேதி சனிக்கிழமை தொடங்கி, 19ந் தேதி ஞாயிறு வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால், வெளியூர் செல்பவர்கள் அதற்கேற்ப பயணத் திட்டம் வகுத்து வருகின்றனர்.

விரைவு ரெயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதால் பொங்கலுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது

ஜனவரி 10ம் தேதி ரெயிலில் செல்வதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்வதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும், எழும்பூர் ரெயில் நிலையத்திலும் அதிகாலை முதலே பயணிகள் கியூவில் காத்திருந்தனர்.

டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. அனைத்து ரெயில்களிலும் காத்திருப்போர் எண்ணிக்கை 150ஐ தாண்டியது.

டிக்கெட் விற்பனை முடிந்து விட்டதால் கியூவில் காத்திருந்தவர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆன்லைனிலும் பதிவு செய்யப்பட்டதாலேயே எங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள்.

மேலும் பலர் ஜனவரி 13ந் தேதி (திங்கள்) இரவு சொந்த ஊர் புறப்படுவார்கள் என்பதால், அன்றைக்கு முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகமிருக்கும். இதற்கான முன்பதிவு வரும் 15ந் தேதி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *