செய்திகள்

பொங்கல் பண்டிகை: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்

சென்னை, ஜன. 10–

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஏற்கனவே விடப்பட்டன.தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக உயர்ந்தது. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.கூட்ட நெரிசலை குறைக்க மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்-தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்-திருநெல்வேலிக்கு முன்பதிவு சிறப்பு ரெயிலும் விடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. இதேபோல 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)யும் மற்றொரு சிறப்பு ரெயில் தூத்துக்குடிக்கு விடப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தூத்துக்குடியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.சிறப்பு ரெயிலில் 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2, 2-ம் வகுப்பு பெட்டிகள் 2 என மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெற்று உள்ளன.

இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை (11-ந்தேதி) 13, 16-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இரவு 9.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த முன்பதிவு சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு 12, 14, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி-3 பெட்டிகள், ஏ.சி. 3 அடுக்கு படுக்கை எக்னாமிக் பெட்டிகள்-9, 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-2, 2-ம் வகுப்பு பொது பெட்டி-2 உள்ளன.

இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மாதேவி வழியாக திருநெல்வேலி சென்றடைகிறது.அதேபோல நெல்லையில் இருந்தும் இதே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குக நேசன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *