செய்திகள்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை, ஜன. 13–

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு செல்வதால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பண்டிகையை கொண்டாட பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் பொதுமக்கள் செல்கின்றனர்.சென்னையில் இருந்து சென்னை- திருச்சியின் தேசிய நெடுஞ்சாலையில் வழியாக செல்லும்பொழுது அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திய பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. வாகனங்கள் அதிகமாக செல்லும்போது சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது போலீசார் உடனடியாக கட்டணம் இல்லாமல் அனுப்பி வருகின்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் கூடுதலாக இரண்டு வசூல் செய்யும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இன்று முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *