செய்திகள்

பொங்கல் ஏன் கொண்டாட வேண்டும்

12 மாதங்களில் தனிப்பெரும் மகிமை பெற்றது ‘தை’ மாதம்.

‘தை’ என ஒற்றை எழுத்தால் ஆன இம்மாதம்தான், மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனச் சொல்லி, சூரியன் தன் பாதையை மாற்றிக்கொண்டு போகும் விஞ்ஞான உண்மையைச் சொன்னது இம்மாதம். உலகெங்கிலும் ‘தமிழா் திருநாள்’ எனப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதும், இம்மாதத்தில்தான். சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. அனைவரும் வாழ, அனைத்தும் வாழ, நாள்தோறும் வலம்வரும் சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல்; தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைத்தாலும், இந்த நாளை ‘உழவர்’ திருநாள்’ என்று அழைப்பதே பெருமை. உழவர்களின் பெருமையை உணர்த்தும் திருநாள் இது.

புதிதாக அறுவடையான அரிசியை பானையில் வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் மற்றும் இஞ்சி கிழங்கை கட்டி பொங்கல் சோறு பொங்கியெழும்போது, ‘பொங்லோ பொங்கல்’ என்று குடும்பதோடு கூவி மகிழ்வார்கள். திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *