வர்த்தகம்

பைக் மெக்கானிக்குகளுக்கு கேஸ்ட்ரால் ஆயில் உதவி திட்டம்

சென்னை, செப். 15

கேஸ்ட்ரால் ஆயில் நிறுவனம், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களுக்கான என்ஜின் ஆயிலான கேஸ்ட்ரால் ஆக்டிவை அறிமுகம் செய்து வரவேற்பை பெற்றது. இது இரு சக்கர வாகன மெக்கானிக்களுக்கு ஆதரவளிக்க நடிகர் கணேஷ் வெங்கட்ராமுடன் இணைந்து இந்திய என்ஜினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் ஆதரவு செயல்பாட்டைத் துவக்கியுள்ளது.

ஊரடங்கிற்குப் பின்பு படிப்படியாக திறக்கப்பட்டு புதிய இயல்புக்கு ஏற்ப, மெக்கானிக்குகளுக்கு உதவ, அவரது இடத்தை தயார் செய்ய இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

கேஸ்ட்ரால் ஆக்டிவ் ரூ.50 லட்சம் வரை செலவு செய்ய உள்ளது. மெக்கானிக்குகள் திறன் மேம்பாட்டிற்காகப் பெறப்படும் ஒவ்வொரு உறுதிமொழிக்கும் ரூ.10 பங்களிப்பினை வழங்கவுள்ளது. கல்வித் திட்டங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன சேவை நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும், வணிகத்தை மறுதொடக்கம் செய்யும்போது அவர்களின் ஒர்க்க்ஷாப்களுக்கான மேம்பட்ட சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கும், அவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தும். 7574-003-002 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் வழங்குவதன் மூலமோ அல்லது www.protectindiasengine.comஐ பார்வையிடுவதன் மூலமோ மெக்கானிக் இளைஞர்களுக்கு கேஸ்ட்ரால் ஆதரவு வழங்க முடியும்.

இந்த பிரச்சாரம் இம்மாத இறுதி வரை நடைபெறும் நிர்வாக இயக்குனர் சந்தீப் சங்வான் தெரிவித்தார். இது பற்றி அறிய www.protectindiasengine.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *