செய்திகள்

பைக் மீது லாரி மோதி விபத்து: தந்தை – மகன் பலி

Makkal Kural Official

கோவை, ஜூன் 14–

கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மெனுமெட்ஷா ராஜேஷ் (39). இவர் கோவை ஞானாம்பிகை மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவர் கீரநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார். இவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா (9) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

மெனுமெட்ஷா வினித் வர்மா காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்டரங்கில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இதற்காக தினமும் காலையில் தந்தை மெனுமெட்ஷா ராஜேஷ் தனது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மாவை பைக்கில் அழைத்துச் சென்று விட்டு பயிற்சி முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

வழக்கம் போல் இன்று காலை 5 மணியளவில் மெனுமெட்ஷா ராஜேஷ் தனது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மாவுடன் சக்தி சாலை பகுதியில் சரவணம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலை சந்திப்பில் மெனுமெட்ஷா ராஜேஷ் திருப்பும் போது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் மெனுமெட்ஷா ராஜேஷ் அவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா ஆகிய இருவரும் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கினர். அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அவர்கள் அலறி துடிப்பதை பார்த்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மெனுமெட்ஷா ராஜேஷ் மற்றும் அவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா உடலை கைப்பற்றி உடல் கூறதாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *