செய்திகள்

போதுமான விவாதமின்றி சட்டம் இயற்றுவது வருத்தம் அளிக்கிறது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

டெல்லி, ஆக. 15–

75 வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, போதுமான விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும் போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

புரிந்து கொள்ள முடியவில்லை

மேலும் கூறும்போது, போதிய விவாதங்கள் நடக்காததால், சட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவதால், ஏராளாமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகளுக்கு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *