செய்திகள்

போதுமான தடுப்பூசி போடாததால் கொரோனாவால் திணறும் ரஷ்யா

மாஸ்கோ, அக். 31–

ரஷ்யாவில் ஒரே நாளில் 40251 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே முதல் முதலாக கொரோனாவிற்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு ரஷ்யா தான். ஆனால் ரஷ்யாவில் தற்போது தினசரி உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் 40251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1160 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் 1160 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய மக்கள் தொகையை ஒப்பிடும்போது இது மோசமான பாதிப்பு ஆகும். ரஷ்யாவில் இது வரை கொரோனா தொற்றால் 8,472,797 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7,331,424 பேர் குணம் அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்புடன் 903,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 237,380 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா திணறல்

ரஷ்யாவில் மொத்தம் 15 கோடி மக்கள் தொகை உள்ளது. ரஷ்யாவில் வாழும் மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 1,626 பேர் என்ற அளவில் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் வாழும் மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 58,026 பேர் என்ற அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் ரஷ்யாவில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

உலகில் கொரோனா பரவ தொடங்கிய போது, ரஷ்யாவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. முதல் அலையும் சரி, இரண்டாவது அலையும் சரி இந்த அளவிற்கு உயிரிழப்பை ரஷ்யாவில் ஏற்படுத்தவில்லை. ஆனால் மூன்றாவது அலை மிக உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை 37 சதவீதம் பேர் மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இதேபோன்றுதான் கொரானா பரவிவருகிறது. ஆனால் ரஷ்யாவில் உள்ளதுபோல் உயிரிழப்பு இல்லை. ஏனெனில் அங்கு தடுப்பூசி பெரும்பாலோனோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம் என்பதற்கு, ரஷ்யா உலகிற்கே எடுத்துக்காட்டாக மாறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *