செய்திகள்

பேஸ்புக் நிறுவன பங்குகள் ரூ.42 ஆயிரம் கோடி வீழ்ச்சி

Spread the love

சென்னை, ஜூலை 25–

தனியுரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்கு சந்தையில் ரூ.42 ஆயிரம் கோடி வீழ்ச்சியை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது.

2018ம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் 8.7 கோடி பயனர்களின் தனி நபர் விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை குறித்தும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்காவின் வர்த்தக ஆணையம் விசாரித்து வந்தது.

16 மாதங்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில் பேஸ்புக் நிறுவனம் தனது 220 கோடி பயனர்களின் தகவல்களைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக வர்த்தக ஆணையம் தெரிவித்தது. ஆகையால் பேஸ்புக்குக்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் ஆகும்.

மேலும், பயனர்களின் தனிநபர் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்காகத் தனி அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையமும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முகநூல் நிறுவனத்தின் பங்குகள், பங்குச்சந்தையில் 1 விழுக்காடு அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம், 600 கோடி டாலர் அளவுக்கு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.42 ஆயிரம் கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *