செய்திகள்

பேராவூரணி அருகே இன்று காலை கார் விபத்து: 4 பேர் பலி; 7 பேர் காயம்

பேராவூரணி, ஜன. 20–

பேராவூரணி அருகே சாலையோரம் இருந்த தடுப்பில் இன்று காலை கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மரியசெல்வராஜ் (வயது 37), இவரது மனைவி பத்மாமேரி (வயது 31), இவரது மகன் சந்தோஷ் செல்வம் (வயது 7)அதேப் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் (வயது 53), சரஸ்வதி (வயது 50), கணபதி (வயது 52), லதா(வயது 40), ராணி (வயது 40), ஞானம்மாள் (வயது 60), பாக்கியராஜ் (வயது 62) கார் ஓட்டுநர் சின்ன பாண்டி(வயது 40) ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் சந்தோஷ் செல்வத்திற்கு முடி இறக்குவதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

4 பேர் பலி

இந்நிலையில், இன்று அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனேரா பகுதியில் கார் வந்துக்கொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில், ராணி, ஓட்டுநர் சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து 6 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பலத்த காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *