செய்திகள்

பேராசிரியை கலாவதி சேகருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.20–

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டுரை நூல் எழுதிய பேராசிரியை கலாவதி சேகருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜோதி ஸ்டுடியோ ராஜா என்ற ரவீந்திர நாதன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் “புதுக் கவிதையில் பெரியாரியல்” என்ற கட்டுரை நூலுக்கு, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வரும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கலாவதி சேகர், அவர்களை பாராட்டி கெளரவித்தார். கிளை செயற்குழு உறுப்பினர் சந்தானம். எழுத்தாளர் கனராம புத்திரன். மாவட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *