செய்திகள்

பேரறிவாளன் பரோல்: மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு

சென்னை, செப். 25–

பேரறிவாளனின் பரோல் 5-வது முறையாக மீண்டும் இன்று தமிழ்நாடு அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

அக்டோபர் வரை நீட்டிப்பு

இதை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, முதல்முறையாக கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. பின்னர், 4 முறை பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளளின் பரோலை 5-வது முறையாக நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளளின் உடல்நலன் கருதி, சிறை விடுப்பை அரசு அக்டோபர் 26-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *