சிறுகதை

பேச்சு – ராஜா செல்லமுத்து

வழக்கமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ஒரு பேருந்தில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது . ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்த அந்தப் பேருந்தில் கொஞ்சம் கூட சங்கடமோ பயமோ இல்லாமல் ஒரு பெண் வளவளவென்று பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பேசும் பெண் அருகில் நிற்பவர்களுக்கு அவள் முகம், அவள் நடவடிக்கை தெரிந்தது . தூரத்திலிருந்தவர்ளுக்கு அவளின் குரல் மட்டுமே கேட்டது.

யார் அந்த பெண் ? பெரிய பேச்சாப் பேசுறா. பஸ் சத்தத்த மீறி அந்த பொண்ணோட பேச்சு சத்தம் கேட்குதுன்னா… அவ எவ்வளவு பெரிய ஆளா இருப்பா என்று அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாமல் அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்தாள்.

என்ன வர்றானா? வந்தான்னா கால ஒடிச்சு விடு . கைய ஒடச்சுவிடு. எந்த மூஞ்சிய வச்சுட்டு, உன் வீட்டுக்கு வரான். ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சில்ல. அப்புறம் ஏன் வரேன். உன் புருஷனுக்கு தெரிஞ்சா, என்ன ஆகும்? தப்பு . அவன தாெரத்தி விட்டுரு என்று இப்படி பேசியபடி வந்தாள்.

அவள் யாருடன் பேசுகிறாள். எதிர் திசையில் இருப்பவர்கள் யார்? என்பதெல்லாம் அந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்கு தெரியாது . ஆனால் அவள் பேசுவதை ஒரு நடுத்தர வயது பெண் கண்கொட்டாமல் பார்த்துக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

என்ன இந்தப் பெண் இப்படி பேசிட்டுடிருக்கிறா. கொஞ்சங் கூட வரைமுற இல்லை. அதுவும் சென்னைத் தமிழ் ஒரு மாதிரியான பாசையில வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. வியப்பின் உச்சிக்கே போய் அந்தப் பெண் பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்தாள்,.

அதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் சென்னைத் தமிழில் ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கும் பெண் பேசுவதை விட அதை ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணையே கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண் பேசுவதை வேடிக்கை பார்த்த பெண்ணிற்கு வினோதமாக இருந்திருக்கும் போல. அவளின் கை சைகை. உடல் அசைவு . அவளின் உடல் மொழி, அவள் உடுத்தி இருக்கும் உடை இதுவெல்லாம் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு வித்தியாசமாகத் தென்பட்டது .

அதுவும் எவ்வளவு ஆண்கள் பெண்கள் நிறைந்திருக்கும், இந்தப் பேருந்தில் இவ்வளவு சத்தமாக பேசுவதாக என்ன? இது நாகரீகமான பெண் இல்லையோ ? என்று வேடிக்கை பார்ப்பவள் நினைத்தாள்.

அவள் உதடுகள் பேசுபவர்களின் உதடுகளைப் போல குவிந்து குவிந்து குறைந்தது .அவளின் கை சைகை போல வேடிக்கை பார்ப்பவனின் கையும் தெரிந்தது.

ஒரு வேலை இந்தப் பெண் பேறவது போல, நாமும் பேச முடியுமா? என்று அச்சப்பட்டு கூட அந்த பெண் நின்று இருக்கலாம்.அதை வைத்தது வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

அந்தப் பேசும் பெண், பேருந்தில் இருக்கும் யாரையும் மதிக்கவில்லை. ஒல்லியான தேகம். ஒட்டிய கண்கள். அப்பிய கருப்பு நிறம் என்று அவளின் உருவம் இருந்தது .

ஆனால் அவளின் பேச்சு மட்டும் அடங்காமல் இருந்தது. பேருந்தில் இருந்தவர்களுக்கு அவளின் பேச்சு, ஒரு விதமான சந்தோஷத்தை தந்தது .அவள் பேசும் தாெனி அவள் கையை அசைக்கும் பாணி இவைகள் எல்லாம் ஒரு சென்னைப் பெண் இவ்வளவு தைரியமாக பேசுவாள் என்பது கண்ணனுக்கு அப்போது நிறைய விளங்கியது.

அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணும், அவள் பேசுவதை வைத்த கண் வாங்காமலே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.ஆனால் அவள் தன் பேச்சை நிறுத்தவே இல்லை.

ஒரு நிறுத்தத்தில் கண்ணனும் இறங்கிக் கொண்டான் . அந்தப் பெண் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணும் இறங்கிக் கொண்டாள்.

ஆனால் நீளும் தார் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தில் அவளின் பேச்சு அந்தச் சாலை வழியாக கேட்டுக் கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.