சிறுகதை

பேச்சுவார்த்தை – ராஜா செல்லமுத்து

நீலிமா ஒரு வினோதமான பழக்கமுடையவள். நிறையப் படித்து இருந்தாலும் அவள் ஒரு குழந்தையாய் தான் இன்னும் இருக்கிறாள்.

அறிவியல் சம்பந்தமான, அறிவு சம்பந்தமான எந்த விஷயமாக இருந்தாலும் நுனி விரலில் நுனி நாக்கில் வைத்திருக்கும் நீலிமாவின் செயல்கள் ஒரு குழந்தைத்தனத்திற்கு ஒப்பானது.

பள்ளி, கல்லூரி , பல்கலைக்கழகம் என்று படித்திருந்தாலும் அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்ப்பவர்களுக்கு விசித்திரமாக தோன்றும் ‘

வீட்டில் வளர்க்கும் நாயுடன் பேசுவாள் .தெரு வழியாகப் போகும் மாடுகளுடன் பேசுவாள்; காக்கையுடன் பேசுவாள்.

கிளிகளிடம் கொஞ்சுவாள். அவள் பேசுவதைப் பார்த்து நீலிமாவிற்கு பைத்தியம் போல என்று கூட சிலர் பேசுவார்கள். அவள் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டாள்.

அப்படி சொல்பவர்களுக்கு உலகத்தில் இருக்கும் உயிர்களை எல்லாம் ஒப்பிட்டு சொல்லுவாள்.

மனுசங்களுக்கு தான் அறிவு இருக்குனு நினைத்தீர்களா? இங்கே இருக்கின்ற எல்லாருக்குமே உயிர் அறிவு இருக்கு. உணர்வு இருக்கு. ஆனா நாமதான் மனுச மட்டுமே சொல்றதைக் கேட்டுட்டு இருக்கம் என்பாள். சிலர் இதை ஒத்துக் கொள்வார்கள். சிலர் முரண்படுவார்கள். அது எல்லாம் அவளுக்கு பெரிதாகத் தெரியாது.

அவளுடைய வீட்டின் மொட்டை மாடியில் பூச்செடிகள் நிறைய வைத்திருந்தாள்.

அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது பராமரிப்பது காலை மாலை அதற்கு நீர் ஊற்றுவது என்று இருப்பாள்.

அதில் வினோதம் என்னவென்றால் ஒவ்வொரு செடிகளுக்கும் அவளுக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை வைத்திருப்பாள்.

சில செடிகள் பூக்காமல் இருக்கும் செடிகளோடு பேசுவாள்.

என்ன பாக்கியலட்சுமி. உனக்கு தினமும் தண்ணி ஊத்துறேன். நீ எனக்காக பூ பூக்க மாட்டேங்கிறியே? இது உனக்கே நியாயமா? நான் உன்ன என் கூட பிறந்த பொறப்பா தான் நினைக்கிறேன்

என்று செடியுடன் பேசுவதை அன்று வீட்டுக்கு வந்த ஒரு பெண் பார்த்து விட்டாள்.

என்ன நீலிமா செடியோடு பேசிட்டு இருக்க. உனக்கு எதுவும் பிரச்சினையா? என்றாள் வந்த பெண்.

உனக்கு என்ன தெரியும்? அது என் கூட பிறந்த பிறப்பு மாதிரி. நான்சொன்னாச் செய்யும்

என்று வாதம் செய்தாள் நீலிமா

சரிசரி நீ சொன்னா செய்யுமா? என்று வாதிட்டாள்.

நீ சாென்னா செய்யுமா ?என்று கேள்வி கேட்டாள் அந்தப் பெண்.

கண்டிப்பா செய்யும் என்றாள் நீலிமா.

இந்தச் செடிகள் எல்லாம் பூக்காம இருக்கு. அப்படி நீ பேசினா உன் பேச்சைக் கேட்டு அந்த செடியெல்லாம் பூக்குமா? என்றாள் அந்தப் பெண்

நிச்சயமா பூக்கும் என்று உறுதியாகச் சொன்னாள் நீலிமா .

அப்படி பூத்துச்சுன்னா நானும் இந்த செடிகள் மனுஷங்களை மனுஷன் பேசுற பேச்சை கேக்குதுன்னு நான் நம்புகிறேன் என்றாள் அந்தப் பெண்

இதை ஒத்துக் கொண்டாள் நீலிமா. தினமும் அந்தச் செடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவளுக்கு ந அவள் கேட்டதற்கு பதிலாக அத்தனை பூக்காத அத்தனை செடிகளிலும் பூக்கள் பூத்திருந்தன.சந்தோசத்தில் உச்சிக்கு சென்றாள் நீலிமா

தன்னைப் பற்றியும் தன் செடியை பற்றியும் பேசிய அந்த பெண்ணை அழைத்தாள்.

பாத்தீங்களா என்னமோ சொன்னிங்களே? இப்ப பாருங்க எப்படி பூ பூத்திருக்குன்னு

என்று நீலிமா சொன்ன போது அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் தலைமுட்டியது

இது நிஜம் தானா? இல்லை வேறு பூக்களை எடுத்து வந்து ஒட்டி வைத்திருக்கிறாரா ? என்று சோதனை செய்தாள். இல்லை இது நிஜம்தான் என்பதை அறிந்து கொண்டாள் அந்தப் பெண் .

அதுவரையில் மனிதர்களுக்கு மட்டும்தான் உணர்வு இருக்கிறது உயிர் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த பெண் மறுநாள் அவள் வீட்டு மாடி முழுவதும் செடிகளால் நிரப்பி வைத்தாள்.

செடிகளை நிரப்பி வைத்தது மட்டுமல்ல . அதோடு பேச்சு வார்த்தையும் ஆரம்பித்திருந்தாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *