செய்திகள்

பெருமாள்மலையில் தன்வந்திரி ஹோமம்

Spread the love

துறையூர், ஏப்.2–

துறையூர் அருகேயுள்ள பெருமாள் மலை மீது தன்வந்திரி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது. துறையூர் அருகேயுள்ள பெருமாள்மலை மீது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இங்கு உலக நன்மைக்காகவும் கரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும்

18 வகையான மூலிகை ஹோம பொருள்கள் பயன்படுத்தி தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. கோயில் பட்டாச்சாரியர்கள் சந்தானம், ராஜா உள்ளிட்டோர் தன்வந்திரி மகா மந்திர பாராயணம் செய்து வேள்வி தீ வளர்த்தனர். நிறைவாக கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.அரசின் தடையுத்தரவு காரணமாக பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *