ஈரோடு, பிப். 05–
வள்ளி கும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர்.
கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் மிகவும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வள்ளி கும்மியாட்டம் கலை மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வள்ளி கும்மியாட்டம் உலக முழுவதும் பறைசாற்றும் விதமாக, பெருந்துறையில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்றுக்கூடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் வள்ளி கும்மியாட்டத்தை முன்னெடுத்தனர்.
கின்னஸ் சாதனை
ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான வள்ளி கும்மியாட்ட
குழுவினரை ஒருங்கிணைந்து இந்த கலையை கற்ற பெண்களை சந்தனம், சிவப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களை கொண்ட ஓரே சீருடையில் வள்ளி முருகன் திருமணத்தை முன்னிறுத்தி கும்மியாட்ட கலை ஆசிரியர்கள் பாடும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்ப கும்மியடித்து நடனமாடினார்.
இந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக கின்னஸ் புத்தக நிர்வாகிகள் நேரடியாக வந்த பார்வையிட்டனர். இந்த வள்ளிகும்மியாட்டம் கின்னஸ் சாதனை பார்க்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மேலும், மெல்லிய உடல் அசைவு வாயிலாக ஓருசேர பெண்கள் கும்மியடிப்பது பார்வையாளர்கள் கவர்ந்தது.
இதையடுத்து, நாட்டுப்புற கலைகளில் ஒன்றான வள்ளி கும்மியாட்ட த்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வள்ளிகும்மியாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.