சென்னை, செப். 1–
பெருங் குடல் அறுவை சிகிச்சை சம்பந்தமான சர்வதேச கருத்தரங்கை இந்தியாவின் முன்னணி மருத்துவமான அப்போலோ மருத்துவமனை அதன் ஐந்தாவது பதிப்பாக சென்னை ஹையாட் ரீஜென்சி ஓட்டலில் நடத்தியது நேற்று முன்தினம் துவங்கிய கருத்தரங்கு, இன்றோடு நிறைவு பெறுகிறது.
அப்போலோ பெரும் குடல் புற்று நோய் (ஏ ஆர் சி) செயல் திட்டத்திலிருந்து படைத்திருக்கும் மருத்துவ விளைவுகள் ஆமணத்தின் வெளியீடு இக்கருத்தரங்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.’ அப்போலோ புரோட்டான் கேன்சரின் ஏஆர்சிசெயல்திட்டம்பெருங்குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சையில் மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்கியிருக்கிறது. முக்கிய பிரிவுகளில் சர்வதேச தரநிலைகளையும் இச்சாதனை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புள்ள நபர்களுக்கு நீண்டகால உயிர்பிழைப்பு விகிதம் என்ற உயர் செயல்திறனுக்கு இது பங்களிப்பை செய்திருக்கிறது.
அறுவை சிகிச்சை மையத்தின் கிளினிக்கல் லீட் பேராசிரியர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறுகையில், ரோபோ அறுவை சிகிச்சைகளை தரநிலைப்படுத்தியுள்ளோம். பெருங்குடல் புற்றுநோய்க்கான உலகின் மிகவும் செலவு குறைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சராசரியாக, மேற்கத்திய நாடுகளில் இதேபோன்ற மருத்துவ செயல்முறைக்கு ஆகும் செலவில் 4-ல் 1 பங்கு செலவில் அதே உயர்தர சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம். அப்போலோ புரோட்டானின் ARC திட்டம்,பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் நடப்பு நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதையும் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிற அதன் மிகச்சிறப்பான விளைவுகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.” என்றார்.
துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், கூறியதாவது:–
“அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவைசிகிச்சை கருத்தரங்கு,உலகின் தலைசிறந்த நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெருங்குடல் அறுவைசிகிச்சைமருத்துவர்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும். இக்கருத்தரங்கம்,சிறந்த சிந்தனையாளர்களை ஒன்றுகூட்டுவதோடு நின்றுவிடுவதில்லை; குறிப்பாக இளம் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இது ஒரு நிலை மாற்றத்தை உருவாக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகும்.
இந்தியாவில் இதற்கு முன்பு இருந்திராத ஒரு நடவடிக்கையாக, வளர்ந்து வரும் திறமைசாலிகள் இந்த அறிவுச் செல்வத்தை தடையின்றி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், கருத்தரங்கிற்கான வருகைப்பதிவை இலவசமாக மாற்றியுள்ளோம். எங்கள் ARC திட்டம், தொடர்ந்து விதிவிலக்கான மருத்துவ விளைவுகளை அளித்து, பல முக்கியமான பகுதிகளில் உலகளாவிய அளவுகோல்களை விஞ்சியிருக்கிறது.
இந்தியாவில் முதன்முறையாக, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் கருத்தரங்கில் பங்கேற்பை கட்டணமில்லாத இலவசமானதாக ஆக்கியிருக்கிறது. இது, இளம் அறுவைசிகிச்சை நிபுணர்கள் நிதி பிரச்சனைகள் இல்லாமல் உயர்தரக் கற்றலில் கவனம் செலுத்த வகை செய்கிறது.