சிறுகதை

பெருகும் அன்பு | ராஜா செல்லமுத்து

எப்போதும் போலவே அன்றும் காய்கறி விற்கும் அழகம்மாவின் கடைக்கு வந்தாள் சிவகாமி.

ஆனால் அழகம்மாவின் கடை திறக்கப்படாமல் இருந்தது.

அதற்காக சிவகாமியின் கடையை நிராகரித்து விட்டு வேறு கடைக்கு போகவில்லை சிவகாமி. அழகம்மாள் வரும் வரை நின்று கொண்டிருந்தாள் சிவகமி

அழகம்மா கடையை விட்டு கொஞ்சதூரம் சென்றிருப்பதாகவும் இப்போது வந்துவிடுவார் என்றும் பக்கத்து கடைக்காரர் சிவகாமியிடம் சொன்னார்.

நீங்க அழகம்மா கடையோட வாடிக்கையாளர் தானே? என்று பக்கத்து கடைக்காரர்கள் கேட்க

ஆமாம் என்று தலையை ஆட்டினாள் சிவகாமி.

கொஞ்சம் பொறுத்துக்கங்க இப்போ வந்துருவாங்க என்று ரொம்ப கனிவோடு சொன்னார் பக்கத்து கடைக்காரர்.

தன் கடையில் பொருள் வாங்க வேண்டும் என்று கூட அவர் சொல்லவில்லை… அந்தப்பக்கத்து கடைக்கும் தான் போய் பொருள் வாங்க வேண்டும் என்று சிவகாமியும் எண்ணவில்லை.

இரண்டு பேருக்குமான புரிதல் அப்படி இருந்ததால் எந்த கடைக்காரரும் சிவகாமியை பொருள் வாங்க வேண்டும் என்று கேட்கவில்லை…. நேரம் கடந்தது

அழகம்மன் கையில் சிறு குழந்தையை பிடித்த படி வந்தாள்.

அம்மா வந்து ரொம்ப நேரம் என்று சிவகாமி பார்த்து கேட்டாள்.

இல்ல இப்பதான் வந்தேன் என்று சிவகாமி சொன்னாள்.

பாப்பாவுக்கு உடம்புக்கு முடியல அதுதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தன்மா. மன்னிச்சிடுங்க என்று அழகம்மாள் சொல்ல

ஐயோ இதெல்லாம் எதுக்கு… தப்பு. பாப்பா நல்லா இருக்கா? என்று கேட்டாள் சிவகாமி.

நல்லா இருக்கு தண்ணிக்குள்ளே ஆடிகிட்டு இருந்திச்சு… அதான் கொஞ்சம் காச்சல் வந்துடுச்சு. வேற ஒன்னும் இல்ல என்று அழகம்மாள் சொல்லிவிட்டு

சிவகாமி கேட்ட காய்கறிகளை எடுத்துப் போட்டுக்கொண்டு இருந்தாள் .

பணத்தைக் கொடுத்துவிட்டு சிவகாமி நகர

அம்மா இந்தாங்கௌ…, இந்த காயை சேர்த்து வச்சுக்குங்க என்று ஒரு பெரிய மாங்காயை கொடுத்தாள் அழகம்மாள்.

வேண்டாம் இருக்கட்டும்… எதுக்கு ?என்று சொல்ல

இல்லமா இது கணக்கில் இல்ல உங்களுக்கு நான் சும்மா குடுத்து இருக்கேன் என்று அழகம்மாள் கொடுத்ததை

சிவகாமி மறுக்காமல் வாங்கி தன் பைக்குள் போட்டுக் கொண்டாள்.

சிறிது தூரம் சென்ற சிவகாமி இடம் மகள் அம்மா ஒரு இருபது ரூபாய் கொடு என்று கேட்டாள்.

மகள் எதற்காகப் பணம் கேட்கிறாள் என்று சிவகாமி கேட்காமலேயே மகள் கையில் இருபது ரூபாயை கொடுத்தாள்.

பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிய சிவகாமியின் மகள் சற்று நேரத்துக்கெல்லாம் கையில் சாக்லேட் உடன் ஓடி வந்தாள்.

ஓடிப்போய் அழகம்மா மகனின் கையில் கொடுத்து அவன் முதுகு தடவி விட்டு சாப்பிடு என்று கொடுத்தார்.

அதைப்பார்த்த சிவகாமிக்கு என்னவோ போல் ஆனது.

அழகம்மாவும் கண்ணீர் மல்க சிவகாமி மகளை வாஞ்சையோடு பார்த்தாள். ..உடம்பு சரியில்ல சாக்லேட் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னாள் சிவகாமியின் மகள்.

சரி நாங்க வர்றோம் என்று சொல்லிவிட்டு சிவகாமி நகர அழகம்மாள் பணமே வாங்காமல் கொடுத்த மாங்காய்க்கு பதில் மகள் தன் கையிலிருந்த பணத்தை வாங்கிக்கொண்டு அழகம்மாள் என் மகனுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தது ஒருவகையில் இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்றாலும் அது ஒரு அன்பை வளர்க்கும் காரியம் என்று தெரிந்து கொண்டாள் சிவகாமி.

வளந்தவர்கள் அன்பை வளைக்கிறார்கள் ..வருகிறவர்கள் தான் அன்பை வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட சிவகாமி

தன் மகளை பார்த்துக்கொண்டே தன் வீடு நோக்கி நடந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *