செய்திகள் வாழ்வியல்

‘பெரிய வளையம்’: பிரபஞ்சத்தின் புது சவால்


தலையங்கம்


விஞ்ஞானம் வளர புரிதல் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் முழுமையாக தெளிதல் ஏற்படுகிறதா? இதற்கான விடைத் தேடல் மனிதகுலத்திற்கு இறுதி நொடி வரை தொடரும் என்பது தான் உண்மை!

அறிவியல் என்பது இயற்கையை அறிந்து தெளிவு ஏற்படுத்துவது என்று புரிந்தாலும், அறிவியல் வரையறுக்கப்பட்ட உண்மை அதாவது மாறாதது, மாறக்கூடாது என்றும் தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் புவிஈர்ப்பு சக்தி.

அண்டசரசாரத்தில் எல்லா நிலப்பரப்புகளிலும், Mass அதாவது நிறை துகள்கள் இருந்தால் அதற்குள் மின் சக்தியும் இருக்கும். அப்படி என்றால் எடையில்லாத ஒன்று இருப்பின் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என யோசிக்கக் கூட முடியாது அல்லவா?

இன்று நாசா, இஸ்ரோ உள்பட பல விண்வெளி ஆய்வு அமைப்புகள் சாட்டிலைட்டுகளை விண்ணில் அனுப்பி மின்காந்த கதிர்வீச்சுகளுக்கும், பூமியின் வெளிவட்டப் பாதை வரை உள்ள காற்று மண்டலத்தையும் தாண்டி நின்று பல்வேறு அற்புத காட்சிகளை தொலைநோக்கி மூலம் மிகத்துல்லியமாக படம் எடுத்து நமக்கு பல புதுப்புது உண்மைகளை சுட்டிக் காட்டி வருகிறது.

இதில் அண்டசராச்சர துவக்கம் பற்றிய பல புதுப்புது தகவல்களும் நமக்கு கிடைத்து வருகிறது.

2018–ம் ஆண்டு வரை அண்டசராசரம் 130 கோடி ஒளி ஆண்டுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் 2021ல் ஜேம்ஸ் லெப் டெலிஸ்கோப் நமது பூமியில் இருந்து பல லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட்டு தொலைதூர நட்சத்திர வான் மண்டலங்களை படம் பிடித்துக் காட்டிய போது அண்டசராசரம் உருவாக நிகழ்ந்த Big Bang அதாவது பெரு வெடிப்பு 430 கோடி ஒளி ஆண்டுகளுக்கும் முன்பாக நடந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்திய பிரபஞ்சத்தில் நமது அறிவியல் அறிவுக்கும் சவால் விடும் ‘பெரிய வளையம்’ கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டனில் உள்ள லாங்கிஷா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாம் முழு நிலவை காணும்போது பெரிய உருவம் என்று வியப்போம் அல்லவா? அதைவிட 15 மடங்கு பெரியளவில் இது விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளில் பார்க்கும்போது தெரிகிறதாம்.

இது விண்வெளியில் பெரிய வளைவு வடிவ அமைப்பாகவும், அதன் விட்டம் 130 கோடி ஒளியாண்டு என்றும் கணக்கிட்டு உள்ளனர்.

அதாவது நமக்கு பகல் 12 மணி நேரம், இரவு 12 மணிநேரம் என்பது போல் அந்த வட்டத்தில் எழும் சூரிய ஒளி கண் பார்வையில் இருந்து மறைய பல கோடி லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்!

இந்த வளையம் பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவுக்கும், புரிதலுக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த வளையத்தை நம்மால் நேரில் காண முடியாது, காரணம் நமது வான் மண்டலத்தில் இருக்கும் புறஊதா கதிர்கள். அதையெல்லாம் தாண்டி, அனுப்பப்பட்டு இருக்கும் தொலைநோக்கு கருவிகள் எளிதில் பார்த்து விடும். அதன் காரணமாக அது நிலைத்திருக்கும் குறிப்புகளை கொண்டு நமது கணினி வழியாகப் பார்க்க முடிகிறது.

நமது கடலில் அடிப்பகுதியில் ஒளி ஏதும் படாத பகுதிகளில் உள்ள உயிரினங்கள் நிலப்பரப்பு சமாச்சாரங்களைவிட மாறுபட்டிருக்கிறது. ஒளி செலுத்தப்படும் தன்மையும் மாறுபட்டு விடுவதை அறிவாம்!

அதுபோன்று தான் ஒளி ஆண்டின் தூரத்தைக் கணக்கிட்டு அண்டசாரச்சர தொலைவை பற்றி பல புதுப்புது உண்மைகளை உணர துவங்கினோம். இனி அந்த ஒளியின் துவக்கத்திற்கும் அப்பால் நிறைந்து இருக்கும் அண்டசராசர நகரியங்களின் உண்மையை உணர முதலடியை எடுத்து வைத்தும் வருகிறோம்.

நட்சத்திரங்கள், கோள்கள் அதன் கதம்பங்களாக இருக்கும் விண்மீன் திரள்கள் ஆகியவை நம் பார்வையில் ஒரு திரளாக இருக்கிறது. அதைப் பார்க்கும் போது ஏதோ ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டிருப்பது போல் காட்சி தருகிறது.

ஆனால் அவையெல்லாம் மிகப்பெரிய பிரபஞ்சத்தின் அளவில் சிறுசிறு திட்டுகள் மட்டுமே!

அந்த சிறு திட்டுகளின் கோட்பாடுகள்படி நாம் இயங்குவதாக மட்டுமே நம்பியிருக்கும் இந்நிலையில் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய பரம்பொருள் வளையம் நீண்டு, அகண்டு எல்லையில்லா மேலும் கீழுமாக இருப்பதில் உள்ளடங்கிய நமது அண்டவியல் வெளிப்படுத்தும் காரணிகளின் சமாச்சாரம் புரிய மேலும் பற்பல ஒளி ஆண்டுகள் ஆகிவிடும்.

நமது பூமியோ 4 கோடி ஆண்டுகள் பழமையானது, அதில் மனிதகுல வருகையின் ஆரம்பம் அதிகபட்சம் 4 லட்சம் ஆண்டுகளாக இருக்கக்கூடும்!

நமது வருங்காலம் பல புதுமைகளையும், உண்மைகளையும் புரிந்து கொள்ள உதவிட வேற்று கிரக உயிரினங்களின் ஆலோசனைகளும் அவைகளை பற்றிய உணர்த்தலும் மட்டுமே உதவும்.

இந்த அண்ட சராசர ரகசியங்களை புரிந்து கொண்டால் மட்டுமே நமது புவியின் பற்பல சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு பெற முடியும்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *