வாழ்வியல்

பெரிய அளவில் முந்திரி தொழிற்சாலை தொடங்க நல்ல எதிர்காலம்

இந்தியாவில் ஆந்திரா, கோவா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒரிசா, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆகிய 8 மாநிலங்களில் முந்திரி விளைகிறது. வெளிநாட்டிலிருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. அதை வறுத்து, உடைத்து, தரம் பிரித்து விற்க பல்லாயிரம் பெரிய பேக்டரிகள் வந்து விட்டன. மூன்றில் இரண்டு பங்கு கேரளாவிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ளன. வியட்நாம் / ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி ஆவதால், துறைமுக நகருக்கு அருகில் ஆயில் இதில் கிடைக்கிறது. முதல் தர பருப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறைந்த கூலியில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கும் ஏரியாக்களில் இத்தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. உலகின் 65% முந்திரி பருப்பை இந்தியா 60 நாடுகளுக்கு அனுப்பி முதலிடம் வகிக்கிறது.

இத்தொழிலை ஊக்குவிக்க முந்திரி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் உதவுகிறது.

www.cashewindia.org பாருங்கள். முந்திரி தொழிற்சாலை தொடங்க உணவு பாதுகாப்பு சட்ட பதிவு பெற வேண்டும்.

www.foodlicencing.fssai.gov.in/userlogin பாருங்கள். வருடத்திற்கு 200 நாட்கள் வேலை செய்து 500 டன் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை தொடங்க என்ன முதலீடு தேவை என அறிவோம்.

முதலீடு 1) நிலம் ரூ.3.50 லட்சம் (2) கட்டிடம் ரூ.50 லட்சம் (3) இயந்திரங்கள் ரூ.60 லட்சம் (4) இதர செலவுகள் 3.00 லட்சம் நடைமுறை மூலதனம் ரூ.36 லட்சம்

இதர தேவைகளுக்கு இருப்பு ரூ.5 லட்சம்

மொத்தம் ரூ. 158.50 லட்சம்

இதில் 25% முதலீடு முயற்சியாளர் ரூ.40லட்சம்

வங்கி/நிதி நிறுவன கடன் ரூ.110 லட்சம்

மொத்தம் ரூ.159 லட்சம்

மிஷின், பிரிக்கும் இயந்திரம், நீராவி பாய்லர், பாத்திரம், பீலிங் மிஷின் என ஏராளமான மிஷின்கள் தேவை. இவற்றை வாங்கி, நிறுவி, முந்திரிபருப்பு உற்பத்தி செய்தார் MMFP எனப்படும் National Mission on Food Processing என்னும் திட்டம், மாநில அரசுகளுடன் சேர்ந்து மானியம் அளிக்கிறது.

www.mofpi.nic.in/schemes பாருங்கள்.

கட்டிடம் கட்டவுள்ள இடமும், இயந்திரங்களும் முதல் ஜாமீனாகவும் (செக்யூரிட்டி), வேறு சிறு சொத்துக்கள் 2ம் (கொலட்ரால்) செக்யூரிட்டியாகவும், ஏற்றுக் கொண்டு வங்கி/நிதி நிறுவனம் கடன் வழங்கும். குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும்.

பொருள் சேவை வரித்துறை, பஞ்சாயத்து, தொழில்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பாய்லர் இன்ஸ்பெக்டர் போன்ற அனுமதிகள் பெற வேண்டும்.

சில புள்ளி விபரங்கள்

1) வருட உற்பத்தி 500 டன் (2) ஒரு ஷிப்ட் 8 மணிநேர வேலை, 200 நாட்கள்/வருடம் (3) கிலோ ரூ.600–800 வரை தரமானதும், கிலோ 500 வரை உடைத்த பருப்பு விற்பனையாகும். 4) மூலப்பொருளான முந்திரி கொட்டை கிலோ ரூ.100 வரை விலைக்கு கிடைக்கும் (2) கூலி 1 கிலோவுக்கு ரூ.125 ஆகும்.

கேரளாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இவை வருவதாலும், தமிழ்நாட்டில் விளைவதாலும் கன்னியாகுமரி மட்டுமல்ல கடலூர் போன்ற மாவட்டங்களிலும் இத்தொழில் வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு முதலீட்டு மானியம் வழங்குகிறது. முதல் தரம் ஏற்றுமதி ஆவதால் மத்திய அரசும் உதவித் தொகை வழங்குகிறது. முயற்சியாளர் 40 முதல் 50 லட்சம் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம். 10 முதல் 20% லாபம் தரக்கூடிய தொழில். இதன் உடைக்கப்பட்ட ஓடுகளில் ஆயில் எடுக்கலாம். பின் எரிபொருளாக விற்பனை செய்யலாம்.

விபரம் பெற www.tnau.ac.in, www.indcom.gov.in, www.india.gov.in/commerce portal/cashew development corporation பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *