செய்திகள்

பெரம்பூர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேசை ஆதரித்து கூட்டணி கட்சியினருடன் மதுசூதனன் பிரச்சாரம்

சென்னை, ஏப்.5–

கொடுங்கையூர் திருவள்ளூர் நகரில் பெரம்பூர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேசை ஆதரித்து (36-வது மேற்கு வட்டம்) அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனுடன் சென்று இரட்டை இலைக்கு தீவிர ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தனர்.

திருவள்ளூர் நகர் 3-வது மெயின் ரோடு, பாரதி நகர், விவேகானந்தர் நகர், வாசுகி நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். சென்ற இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

பிரச்சாரத்தில் என்.எம்.பாஸ்கரன், மா.ஜெயபிரகாசம், ஜெ.கே.ரமேஷ், மா.ஜெயபிரகாசம், ஆக்கம் அகஸ்டின், கே.எஸ்.அஸ்லாம், நாம்கோ சேர்மன் வியாசை எம். இளங்கோவன், எஸ்.ஏ.சூசை, லயன் ஜி.குமார், காந்தி நகர் ஐ.ஜோசப்வின்சென்ட், காஞ்சி.ராஜரத்தினம், எம்.ராமமூர்த்தி, முத்துசெல்வம், வேல்முருகன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி சேவியர், தோழமை கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கொடிகளை ஏந்தி சென்றார்கள்.

பெரம்பூர் மூலக்கடை சர்மா நகர் பகுதியில் அண்ணா.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர்.தனபாலன், காமராஜர் சாலை 44-வது கிழக்கு வட்டத்தில் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார். முன்னதாக முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஆர்.எஸ். ராஜேஷை ஆதரித்து என்.ஆர்.தனபாலன் பேசிய போது..

ஆர்.எஸ்.ராஜேஷை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற செய்தால் தொகுதியில் மக்கள் தேவைகளை அறிந்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவார் அவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத்தொடந்து கக்கன்ஜி காலனி, கக்கன்ஜி நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, பெரியார் நகர், உள்ளடங்கிய பகுதியில் உள்ள வாக்காளர்களை நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு தீவிர ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

இதில் ஜெ.கே.ரமேஷ், நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன், மு.வெற்றிவேந்தன், எஸ்.மனோகரன், காந்திநகர் ஐ.ஜோசப் வின்சென்ட், கக்கன்ஜி நகர் அ.வேல்முருகன், காஞ்சி.ராஜரத்தினம்,சி .ஆனந்தன், ஆர்.சுதர்சனம், சில்வர் பி.சுகுமார், உதயகுமார், வெங்கடேசன், சந்தனசிவா, ஆர்.ஸ்டீல் பிரபு, டி.பாரத், ஆர்.சந்துரு, ஏ.சாய், ஆர்.ராஜேஷ், கலைசெல்வி, வாசுகி, சின்னப்பொன்னு, மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *