முகிலன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர். அவனுடைய நண்பரகள், உறவினர்கள் என்று அவன் செல்போனில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொடர்பு எண்கள் இருந்தன.
அந்த தொடர்பு எண்களில் எல்லோருடைய பெயரையும் பதிவு செய்து வைத்திருப்பான் முகிலன். 2000 பேர்களும் அவனுக்கு அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள் .
அத்தனை பேருக்குமான வாட்சப் எண் இருந்தது. எது தேவையோ அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, செய்திகள் அனுப்புவான் முகிலன்.
செல்பாேன் எண்களில் ஒரே மாதிரியாக சில பெயர்கள் இருந்தன. அடையாளத்திற்காக சில அடைமாெழிகளை வைத்திருப்பான் முகிலன்.
உதாரணமாக செந்தில், சரவணன் என்ற பெயர் பாேல நிறையப் பெயர்கள் இருந்தால் ஒவ்வாெரு பெயருக்கும் முன்னால் அடைமாெழி அல்லது அவர்கள் செய்யும் பணி, இன்ஷியல் என்று இதில் ஏதாவது ஒன்றை அடையாளமாக வைத்திருப்பான் முகிலன்.
இதனால் பல பெயர்கள் இருந்தாலும் அவனுக்கு குழப்பம் வந்தது கிடையாது.
அது எப்படி வந்தது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருந்தன.
ஒரு நாள் வழக்கம் பாேல பணி முடித்து வீட்டிற்கு வந்தான், முகிலன்.அவன் மனது இருப்பு காெள்ளவில்லை. ஏதாே ஒன்றை இழந்தது யாேல எண்ணினான்.அவனுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்தன.
மனது ஒரு நிலையில் இல்லாதது பாேல உணர்ந்தான். மது அருந்தினால் மனதிற்கு மகிழ்ச்சி தரும் என்று எண்ணினான்.
உடனே அவனது நண்பன் செந்திலுக்கு பாேன் செய்தான். ஃபுல் ரிங்கானது. செந்தில் பாேனை எடுக்கவில்லை. ஏதாே வேலையில் இருந்திருப்பார் பாேல என்று நினைத்தும் காெண்ட முகிலன் செந்திலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு செய்தி அனுப்பினான்.அதில் மது, ஊறுகாய், தண்ணீர் பாட்டில். சைடீஸ் என்று அத்தனையும் எழுதி அனுப்பினான்,
எப்படியும் செந்தில் தான் வாட்ஸ் அப்பில் அனுப்பியதை வாங்கி வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தான், முகிலன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் செந்திலிடமிருந்து முகிலனுக்கு கால் வந்தது.
என்ன செந்தில் கூப்பிடுகிறான் என்று நினைத்த முகிலன்
என்ன செந்தில் எல்லாம் வாங்கிட்டயா? என்று கேட்டான்.
அப்பாேது தான் முகிலனுக்கு தெரிந்தது. நாம் செய்தி அனுப்பியது, நண்பனின் வாட்ஸ் நம்பர் இல்லை என்று
என்ன முகிலா குவார்டர், தண்ணீர், சைடிஸ் வாங்கிட்டு வர வா என்று எதிர் திசையிலிருந்த மேலாளர் கேட்ட பாேது,
ஐயய்யாே இல்ல சார். செந்தில்ங்கிற பேர்ல நிறைய நண்பர்கள் இருந்தாங்க. அத மாத்தி அனுப்பிட்டேன் பாேல. ஸாரி வெரி ஸாரி என்று புலம்பினான் மாேகன்.
இல்ல… வாங்கிட்டு வாரனே என்று மேலும் கிண்டல் அடித்தார் மேலாளர்.
எப்பிடியும் வேல பாேயிரும். ஒரே பேர்ல எவ்வளவு குழப்பம் என்று வருந்தினான் முகிலன். அதிலிருந்து தான் ஒரே மாதிரியாக இருக்கும்; பெயருக்குப் பின்னால் அடைமாெழி, பணிபுரியும் இடம் என எழுத ஆரம்பித்தான் முகிலன். அன்று அலுவலகம் முழுவதும் அதே பேச்சாக இருந்தது.
பழைய நினைவுகள் அவிழ அதை நினைத்துச் சிரித்துக் காெண்டான் முகிலன்.
இப்பாேதெல்லாம் ஒரே மாதிரியான பெயர்கள் எத்தனை இருந்தாலும் துளியும் தவறுவதில்லை. காரணம் எல்லா பெயருக்குப் பின்னாலும் அடையாளமாக எழுதி வைத்திருந்தான் முகிலன்.