செய்திகள்

பெண் எம்.பி. சுவாதி மாலிவால் புகார்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிச்செயலர் கைது

Makkal Kural Official

புதுடெல்லி, மே 18–

முன்னதாக கெஜ்ரிவால் வீட்டிற்குள் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் எம்.பி., சுவாதி மாலிவால் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் மாலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் கெஜ்ரிவால் வீட்டில் விசாரைண நடத்திய பின்னர் பிபவ் குமாரை கைது செய்தனர்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது தன்னை, முகம், மார்பு வயிறு என என்னை சரமாரியாக அடித்தார் என பிபவ் குமார் மீது சுவாதி மாலிவால் புகார் கூறினார். இதன் அடிப்படையில் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சுவாதி மாலிவால் மீது பிபவ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பிபவ் குமார் கூறியுள்ளதாவது:

கடந்த 13ம் தேதி காலை 8:40 மணிக்கு கெஜ்ரிவால் வீட்டிற்கு ஸ்வாதி மாலிவால் வந்தார். அவரை யார் என பாதுகாவலர்கள் விசாரித்த போது, தன்னை ராஜ்யசபா எம்.பி., என அறிமுகப்படுத்தி கொண்டார்.

சந்திப்புக்கான நேரம் குறித்து ஆய்வு செய்யும் வரை காத்திருக்கும்படி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். பிறகு, கெஜ்ரிவாலை சந்திக்க உள்ளவர்களின் விபரம் குறித்து ஆய்வு செய்ததில் அந்த பட்டியலில் சுவாதி மாலிவால் பெயர் இல்லை.

பிறகு பாதுகாவலர்கள் தடையையும் மீறி அத்துமீறி கெஜ்ரிவால் வீட்டிற்குள் உள்ளே செல்ல அவர் முற்பட்டார். உள்ளே செல்வதற்கு அனுமதி பெற்றதாக பொய் தகவல் கூறியதுடன், வலுக்கட்டாயமாக அத்துமீறி உள்ளே செல்ல முற்பட்டார். பிறகு காத்திருப்போர் அறையில் காத்திருக்கும்படி சுவாதி மாலிவாலிடம் கூறிய போது, எங்களை அவர் திட்டினார். சந்திப்புக்கான நேரம் குறித்து கெஜ்ரிவாலிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனக்கூறினார்.

மோசமான விளைவு:

எச்சரிக்கை

பிறகு, 9 மணியளவில் காத்திருப்போர் அறையில் இருந்து உள்ளே வந்தார். இது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் வந்து பார்த்த போது சுவாதி மாலிவால் டிராயிங் அறையில் அமர்ந்து இருந்தார்.

அவரிடம், சந்திப்பதற்கான நடைமுறையை முறையாக பின்பற்றும்படி அமைதியாக கூனேன். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் சுவாதி மாலிவால் என்னைத் திட்டியதுடன், கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்காவிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்.

அங்கிருந்து வீட்டிற்குள் செல்ல சுவாதி மாலிவால் முற்பட்டார். அவரின் நடவடிக்கைகள், கெஜ்ரிவாலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், அவர் முன் சென்று தடுத்து நிறுத்தினேன். அப்போது என்னை தள்ளிவிட்டு விட்டு, சுவாதி மாலிவால் அங்கிருந்து சோபாவில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தவறான புகார் தெரிவித்தார்.

அங்கிருந்து வெளியேறும்படி, அவரிடம் நான் அமைதியாக கூறினேன். அப்போதும் என்னைத் தள்ளிவிட்டு திட்டியதுடன், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மீண்டும் எச்சரித்தார். அங்கு வந்த பாதுகாப்பு ஊழியர்களையும் திட்டிவிட்டு அங்கிருந்து 9.35 மணியளவில் வெளியேறினார்.

லோக்சபா தேர்தல் நடக்கும் நேரத்தில் பா.ஜ.,வின் தூண்டுதல்படி செயல்பட்டுள்ள சுவாதி மாலிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கட்சி தலைவர்களுடன் அவர் செய்த கலந்துரையாடல்கள், தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு தனிச்செயலர் பிபவ் குமார் கூறியுள்ளார்.

கெஜரிவாலின் முகப்பு

படம் நீக்கம்

இந்நிலையில், எக்ஸ் வலைதள பக்கத்தில் முகப்பு படமாக கெஜ்ரிவாலின் படத்தை சுவாதி மாலிவால் வைத்து இருந்தார். இந்நிலையில் இன்று அந்த படத்தை சுவாதி மாலிவால் நீக்கிவிட்டார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை ஆம் ஆத்மி வெளியிட்டு உள்ளது. அதில், சுவாதி மாலிவால் குற்றச்சாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் என அக்கட்சி கூறியுள்ளது. அதில், ஸ்வாதி மாலிவாலை பெண் பாதுகாவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

வலது கண்,

இடது காலில் காயம்

இதனிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது வலது கண் மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *