செய்திகள்

பெண்கள், குழந்தைகளுக்காகவே காவேரி குழுமத்தின் ‘‘மா காவேரி’’ மருத்துவமனை

திருச்சியில் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

திருச்சி, ஜூன் 17–

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக ‘மா காவேரி’ மருத்துவமனையை காவேரி குழுமத்தின் சார்பில் தென் தமிழகத்தில் முதன் முறையாக திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார், மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணி வண்ணன்.

இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர். டி. செங்குட்டுவன் ஆகியோர் தலைமை தாங்கினார் .

விழாவில் கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி கவுன்சிலர் கலைச்செல்வி பகுதி செயலாளர் மோகன் தாஸ், தில்லை நகர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள், மருத்துவர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 25 ஆண்டுகளாக நமது குழந்தைகள் நலத்துறை மற்றும் மகளிர் மருத்துவ துறையின் பயணம் குறிப்பிடத்தக்கது. மா காவேரியில் அதிந வீன தொழில்நுட்பம் மற்றும் உயர் பயிற்சி பெற்ற நிபுணர் குழுவின் சேவை 24 மணி நேரமும் கிடைக்கும். குழந்தை மருத்துவ பிரிவில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தை புற்றுநோயியல், குழந்தை இரைப்பை குடல், குழந்தை சிறுநீரகவியல் மற்றும் நியோனாட்டாலஜி போன்ற சேவைகள் உள்ளன.

குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைக்கான பிரத்யேக 11 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு,10 படுக்கைகள் கொண்ட தீவிர கண்காணிப்பு பிரிவு,

50 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 5 படுக்கைகள் கொண்ட எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு ஆகியவை இந்த மருத்துவமனையில் உள்ளன.

24 மணி நேர

மகப்பேறு பிரிவு

24 மணி நேர மகப்பேறு மற்றும் அதிக ஆபத்துள்ள கர்ப்ப பராமரிப்பு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மகளிர் அறுவை சிகிச்சை, கரு மருத்துவம், குழந்தை இன்மை சிகிச்சை, மகளிருக்கான உயர் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் புற்றுநோயியல் சிகிச்சை உள்ளிட்ட பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட விரிவான சேவைகளை வழங்குகிறது.

24 மணிநேர மகளிர் அவசர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட பிரசவ அறைகள், நவீனமயமான அறுவை சிகிச்சை அரங்குகள், மகளிருக்கான தீவீர சிகிச்சை பிரிவு, உலக தரம் வாய்ந்த அதி நவீன மருத்துவ உபகரணங்கள் போன்ற வசதிகளை உள்ளடக்கியது

உயர்தர மருத்துவ

பராமரிப்பு

இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர். டி செங்குட்டுவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,“மா காவேரி மூலம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் உய ர்தர குழந்தை நல சிகிச்சைக்காக வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் மருத்துவமனை விரிவான சிகிச்சை வசதிகளை அளிக்கிறது. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே எங்கள் குழந்தை நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்கிறது” என்றார்.

காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணி வண்ணன் கூறும் போது, பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

“மா காவேரி மூலம், பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் விரிவான சிகிச்சையைப் பெறும் புகலிடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் முதல் மேம்பட்ட மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைகள் வரை, உயர்தர மருத்துவ பராமரிப்புடன் பெண்களுக்கு ஆதரவளிப்பதே எங்கள் குறிக்கோள்”.

இவ்வாறு அவர் கூறினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *